மின்னுவதெல்லாம் தங்கமே : கூறுகிறார் லிங்குசாமி

lingutwtr‘ ஜிகினா ‘ ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ்.
தரமான படங்களை வெளியிடுவதில் இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி pictures முன்னோடியாக இருந்து வருகிறது. அவரது  நிறுவனம் வெளியிட்ட வழக்கு எண் 18/9, கோலி சோடா, மஞ்சபை , சதுரங்க வேட்டை ஆகிய படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.அதைத்  தொடர்ந்து திருப்பதி pictures அடுத்ததாக வெளியிடும் ‘ ஜிகினா’ வரும் 21ஆம் தேதி வெளிவர உள்ளது.
‘ஜிகினா’ இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் முக்கியமான படமாகும்.பெருகி வரும் சமூக வலை தள  குற்றங்களைப் பற்றியும், அதன்   வாயிலாக பெருகும் குற்றத்தை பற்றியும் ,அறிமுகம்  இல்லா  காதல் ஏற்படத்தும் விளைவுகளையும், மிகவும் ஜனரஞ்சகமாக இன்றைய இளைஞர்களின் மன நிலையை தெள்ள தெளிவாக படம் எடுத்து காட்டி இருக்கிறார் எனது நண்பரும் இயக்குநருமான ரவி நந்தா பெரியசாமி. எனது நிறுவனத்தின்  மூலம்  வெளியாகும் படங்களின் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. நல்ல கதைகளையும் அதை சரி வர இயக்கும்  இயக்குநர்களையும் இனம் பிரித்து அறிமுகம் செய்வதில் தான் சூட்சுமம் இருக்கிறது
.’ஜிகினா’ படத்தில் நாயகனாக நடிப்பவர் விஜய் வசந்த். அவர் இந்த பாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய அளவுக்கு யாரேனும் பொருந்தி இருப்பார்களா  என்பது  எனக்கு தெரியாது.அவரது ஜோடியாக அறிமுகம் ஆகிறார் சானியா தாரா.சிங்கம் புலி, ரவி மரியா,’ கும்கி’ அஷ்வின் , ‘டாடி’ செந்தில், சுகு  வெங்கட், குட்டி ஸ்ரீதேவி, மற்றும் ஆன்சன் பால் ஆகியோரும்  சிறப்பாக நடித்து உள்ளனர்.புதிய இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஷ்  சிறப்பாக இசை அமைத்து உள்ளார் . முன்னாள்  பிரபல ஒளிப்பதிவாளர்  ரங்காவின் மகனும் ஒளிப்பதிவாளருமான   பாலாஜி ரங்கா இந்த படத்துக்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணாவின் பட தொகுப்பில் உருவான ‘ ஜிகினா’ பெரும் எதிர்பார்ப்புக் கிடையே வரும் 21 ஆம் தேதி வெளி வர உள்ளது.இளைய  தலைமுறையினருக்கு இது படமாக  மட்டும் அல்ல பாடமாகவும் ”அமையும்  என்றார் லிங்குசாமி.