மீகாமனின் உண்மையான வெற்றி எது? -மகிழ்திருமேனி

mahizh-cpகிறிஸ்துமஸ் வெளியீடுகளில் பட உருவாக்கத்தில் பேசப்பட்டு வெற்றிப் படிகளில் ஏறிக் கொண்டு இருக்கும் படம் ‘மீகாமன்’. இப்படத்தின் வெற்றிச் சந்திப்பு இன்று நடந்தது.

நிகழ்ச்சியில் இயக்குநர் மகிழ் திருமேனி பேசும்போது. “இந்த வெற்றியை ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். மக்களின் ரசனையை நம்பி புதிய முயற்சியில் ஈடுபடலாம் என்ற நம்பிக்கையை அங்கீகாரத்தை இந்த வெற்றி மூலம்  மக்கள் தந்திருக்கிறார்கள். ஊக்கம் கொடுத்த ஊடகங்களுக்கு நன்றி. சமரசம் செய்ய தூண்டாத் தயாரிப்பாளருக்கு நன்றி. ஆர்யாவின் உறுதுணை இல்லை என்றால் இந்தப் படமே சாத்தியப் பட்டிருக்காது. மெனக்கெடுவார் அது தெரியாமல் நடிப்பவர் அவர். பேசும் மொழி, உடல் மொழி இரண்டிலும் மீகாமனில் அடுத்த பரிமாணம் தொட்டிருக்கிறார்.ஒரு கெட்டவார்த்தை பேசி நடிக்கவே 9டேக்குகள் வாங்கினார் வில்லன் நடிகர் ஹரிஷ்.அவ்வளவு கூச்சப்பட்டார்.அவ்வளவு சாந்தமானவர் அவர்.அவரைப்பார்த்து இன்று எல்லாரும் பயப்படுகிறார்கள்.திட்டுகிறார்கள்.

என்னுடன் பணியாற்றுவது அவ்வளவு எளிதல்ல சிரமம். பாடாய் படுத்துவேன்.
இன்று படத்தை மட்டுமல்ல பணியாற்றியுள்ள நடிகர், இசைமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,ஒலிப்பதிவாளர், எடிட்டர் ,சண்டை இயக்குநர் வரை தனித்தனியாக இனம் கண்டு பாராட்டுகிறார்கள். அதுதான் மீகாமனின் உண்மையான வெற்றி அதுதான்  பெரிய வெற்றி,” என்றார்.

நிகழ்ச்சியில் ஆர்யா ,ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார், ஒலிப்பதிவாளர் உதயகுமார், நடிகர் ஹரிஷ், சஞ்சனாசிங், கலைஇயக்குநர் மோகன் மகேந்திரன் ,இசைமைப்பாளர் தமன் ஆகியோரும் பேசினார்கள்.meekaman-grp