மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி!

இயக்குநர் பாலாவும் -சூர்யாவும் கூட்டணியாக நந்தா ,பிதாமகன் படங்களுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கூட்டணியில் இணைய உள்ளார்கள். இதுபற்றி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருப்பதாவது:

“என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்.”இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.