‘முத்துக்குமார் வாண்ட்டடு’ கதைச்சுருக்கம்

muthukmr22சென்னையில் பெற்றோருடன் வசித்துவரும் ஆனந்திக்கு சிறுவயது முதல் முத்துக்குமார் என்ற பெயரில் பல பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முத்துக்குமார் யார் என்று தெரியாதபோதிலும் மகிழ்ச்சியுடன் அந்த பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறாள் ஆனந்தி. முத்துக்குமாரை பல முறை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் ஆனந்திக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அன்றையதினம் ஒரு பரிசுப்பெட்டகத்தை அனுப்பிய முத்துக்குமார் அதனுடைய சாவி தன்னிடம் இருப்பதாகவும், தான் மலேசியா செல்லவிருப்பதால் ஏர்போர்ட் வந்து சாவியை பெற்றுக்கொள்ளும்படி ஒரு கடிதத்தையும் இணைத்துள்ளார்.

அப்படி ஏர்ப்போர்ட் வரத்தவறினால் மலேசியா வந்து பெற்றுக்கொள்ளவும் அக் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனந்தி ஏர்ப்போட் செல்கிறாள். ஆனால் அதற்கு முன்பே முத்துக்குமார் மலேசியா சென்று விடுகிறான். திருமணத்திற்கு ஐந்து நாட்கள் உள்ள நிலையில் தந்தையின் அனுமதி பெற்று முத்துக்குமாரைத் தேடி மலேசியா செல்கிறாள் ஆனந்தி, அங்கு அவளுக்கு ஏற்படும் சுவையான சம்பவங்களையும், அவள் முத்துக்குமாரை சந்தித்தாளா ? அந்த பெட்டகத்தின் சாவியை பெற்றுக்கொண்டாளா என்பதை நகைக்சுவை கலந்து விறுவிறுப்புடன் ‘முத்துக்குமார் வாண்ட்டடு’ இயக்கியுள்ளார் இயக்குநர் M.பத்மநாபன். இப்படத்தை இந்தியன் டிரீத் தியேட்டர்ஸ் சார்பாக முனியாண்டி கேசவன் மற்றும்  R.வேல்சரவணன் இணைந்து தயாரித்துள்ளனர்.

தொழிற்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – M.G. குமார்

படத்தொகுப்பு – M.S. பிரேம்நாத்

இசை சுந்தரா

பாடல்கள் – Cococo நந்தா

தயாரிப்பு வடிவமைப்பு – V.C. ஜெயமணி

பின்னணி பாடியவர்கள் நரேஷ் ஐயர், சத்யன் , பிரியதர்ஷினி, திவாகர்,மதுமிதா, சிந்தியாஷினி, சாஸ்தன், Cococo நந்தா O.G.தாஸ்

நடிகர்கள்

சரண் ( அறிமுகம்)

நஷிரா ( அறிமுகம்)

நிழல்கள் ரவி

பாத்திமாபாபு

VC.ஜெயமணி

ரோபோ சங்கர்

சாய்ராம்

அஸார்

பாம்பே கௌசல்யா

வாணி

பேபி அம்மு

பேபி மனிஷா மற்றும் பலர்