மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல் பின்னணியில் உருவாகும் ‘துடி ‘

மைன் டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், ஜி.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘துடி ‘ என்று பெயரிட்டுள்ளனர்.

thudi1இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி, மற்றும்  இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.

கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார்.

இசை   –    நடாஷா ஆதித்யா

கலை   –    ஜே.கே

தயாரிப்பு மேற்பார்வை   –   சம்பத்

தயாரிப்பு  –   ரிதுன் சாகர்,ஜி .லஷ்மி

எழுதி இயக்குபவர் –  ரிதுன் சாகர். இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை .விஷுவல் படித்து விட்டு நிறைய குறும்படங்கள் இயக்கி இருக்கிறார். அந்த அனுபவத்தை கொண்டு விறுவிறுப்பான கதையை உருவாக்கி “ துடி “ என்று பெயரிட்டுள்ளார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்….

ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் டெரரிஸ்ட் அட்டாக் தான் கதை !

மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் கதை! அந்த காலகட்டத்தில் உருவான மிஸ் கம்யூனிகேசன் தான் கதையின் மையக்கரு.

அபிநயா ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் ஆக நடிக்கிறார். படம் ஆரம்பித்தவுடன் சீட் நுனிக்கு  வரும் ரசிகன் முடியும் வரை அதே மன நிலையில் இருப்பதுதான் திரைக்கதையின் முக்கிய அம்சம்.

இதற்காக சென்னையில் பைவ் ஸ்டார் ஹோட்டலின் இண்டீரியர் அரங்குகளாக அமைக்கப் பட உள்ளது.

சென்னை, ஹைதராபாத், மூணார் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார் ரிதுன் சாகர்.