மூடர்கூடம் ராஜாஜி நாயகனாக நடிக்கும் ‘சதுரன்’ :இரவில் நடக்கும் கதை!

sadhuran3 மூடர்கூடம் ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் “சதுரன் “ இப்படத்தை குபேரன் சினிமாஸ் சார்பில், குபேரன் P.பொன்னுச்சாமி தயாரிகிறார்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர்  கே.ராஜீவ்பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். கதாநாயகியாக வர்ஷா அறிமுகமாகிறார். மற்றும் முண்டாசுப்பட்டி காளிவெங்கட், கயல் தேவராஜ், இயக்குநர் ராஜீஸ்வரன், ஆகியயோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவு மோனிக்குமார்.ஜி இவர் ஹாலிவுட் படங்களான ஸ்லம்டாக் மில்லியனர், மரியான், கோஸ்ட் புரோடோகால் போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

இந்த படத்திற்கு ஏ.கே.ரிஷால்சாய் இசையமைதிருக்கிறார்.              படத்தொகுப்பு- சுரேஷ்அர்ஸ்                                       வசனம்  – ஜி.ராதாகிருஷ்ணன். இவர் விஷால் நடித்த ஆம்பள படத்திற்கு வசனம்   எழுதியவர்.                                                    பாடல்கள்   –  யுகபாரதி, முத்தமிழ்                                            இப்படத்தில் சென்னை ஆட்டோக்காரனான நாயகன், ஜனனி என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் மனதில் இடம்பெற முயற்சிக்கும் வேலையில், உதவும் மனப்பான்மை கொண்ட நாயகன் சட்ட விரோத கும்பலின் சதியில் தானாக மாட்டிக் கொள்ள, அதனால் தன்னுடைய நண்பர்களுக்கும் ஆபத்து இருப்பதை உணர்ந்து காப்பாற்ற போராடும் திகில் நிறைந்த பொழுது போக்கான படம்.

படத்தின் ப்பதால் சென்னை நகரத்தின் முக்கியமான சாலைகளில் சென்னையின் இருண்ட பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் படமாக அமையும் இந்த சதுரன்.