‘மெர்க்குரி’ விமர்சனம்

இது திகில் படங்களின் சீசன்,கார்ப்பரேட்கள் மக்களை  ஏமாறறும் காலமும் கூட.கார்ப்பரேட் நிறுவனங்களின் பண வெறியால் மக்கள் பாதிககப்படும் இந்திய சூழலை மையமாக வைத்து எடுககப்பட்டுள்ள படம்தான் ‘மெர்க்குரி’. பேசும் படத்திற்குப் பிறகு வந்துள்ள  பேசாத படம் .அதாவது ,வசனமில்லாப்படம்.

கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் நச்சு கழிவால் பாதிக்கப்பட்டு  பேச்சுத்திறன், செவித்திறன் இழந்தவர்கள் ஐந்து பேர். இந்த ஐவரும் நண்பர்கள் . அவர்கள் தங்களது கல்லூரி விழாவில் பங்கேற்க ஓர் இடத்தில் கூடுகிறார்கள். ஒன்றாக சேர்ந்த மகிழ்வில், காரை எடுத்துக்கொண்டு இரவு நேரத்தில் ஊர் சுற்றுகிறார்கள் .எதிர்பாராத  விதமாக விபத்து ஒன்றை  அவர்களால் ஏற்படவே ,அதில் ஒருவர் சிக்கி உயிரிழக்கிறார். இந்தச் சம்பவத்தால் பயந்த  அந்த ஐந்து நண்பர்களும், அந்த சடலத்தை எடுத்து பழைய  தொழிற்சாலை ஒன்றில் புதைத்து  மறைத்து விடுகிறார்கள். பிறகு தங்களது பொருள் அங்கு தொலைந்துவிட அதை தேடி  அவர்கள் செலலும் போது ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களைக் கொலை செய்வது யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள், என்பது தான் ‘மெர்க்குரி’ படத்தின் கதை.

 வழக்கமாகவே திரில்லர் படம் என்றாலே  அலறல் சத்தம் நிறைந்ததாகத் தான் இருக்கும். ஆனால், இப்படம் சத்தம் இல்லாத ஒரு திகில் படம் அதுதான் இதன்  தனித்துவம்  எனலாம்.

திகில் படம் என்பதால் ரசிகர்களைப் பயமுறுத்துவது மட்டுமே முக்கியம், என்று யோசிக்காமல் அதன் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொல்லியிருக்கிறார்.

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களாக நடித்துள்ள அந்த ஐந்து நண்பர்களது நடிப்பும், பிரபு தேவாவின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. பிரபு தேவா இதுவரை பார்த்திராத ஒரு பாத்திரத்தில்  வருகிறார்.

சந்தோஷ் நாராயணின் இசை, திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு என்று தொழில்நுட்பங்கள் அனைத்தும் படத்திற்கு    பலம் சேர்த்துள்ளன.

ஆங்கிலப் படங்களின் தாக்கத்தை வைத்து எழுதப்பட்ட திரைக்கதை என்றாலும் சமூக சிந்தனை உள்ள திகில் படமாக கார்த்திக் சுப்புராஜ் கதை சொல்லியிருக்கும் விதமும்  பாராட்டும்படி உள்ளது.ஆமாம் அவர்  இதை வசனமில்லாத படமாக எடுக்க நினைத்தது  ஏன்? இது தான் படத்தில் புரியாத புதிர்.

Pin It

Comments are closed.