யானையுடன் ஓவியா நடிக்கும் “சீனி”

seeni1கே.சி..ரவி வழங்க., வேலம்மாள் சினிகிரியேஷன் மதுரை ஆர்..செல்வம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சீனி”.

ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த படித்த இளைஞன் அரசாங்க வேலைக்கு போக பிடிக்காமல் பெரிய தொழிலதிபர் ஆக வேண்டியதே லட்சியம் என பேராடுகிறான். அவனது போராட்டம் எவ்வாறு வெற்றிடைந்தது? எப்படி தொழிலதிபர் ஆனான்.?! அவனுக்கு  நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியது யார் யார்…?” என்பதே சீனி படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான கருவும் களமும் கதையுமாகும்.
இயக்குநர்கள் மனோஜ் குமார், சுராஜ் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜதுரை என்பவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ஸ்ரீகாந்ததேவா இசையில், E.K. நாகராஜன் ஒளிப்பதிவில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் சீனி படத்தின் கதை.

இந்த கதையை முழுக்க முழுக்க காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து காதல், சென்டிமெண்ட்டுடன் கூடிய ஜனரஞ்சகபடமாக உருவாக்கி இருக்கின்றனர். கதாநாயகியாக ஒவியா நடித்திருக்கிறார். கதாநாயகராக சஞ்சீவி எனும் இளைஞரும், காமெடிநாயகராக பரத்ரவி எனும் இளைஞரும் அறிமுகமாகிறார்கள். ராதாரவி, சரவணன், செந்தில், சின்னி ஜெயந்த, கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார், டி.பி.கஜேந்திரன், இயக்குநர்.மனோஜ்குமார், வையாபுரி, சுவாமிநாதன், பாவாலட்சுமணன், ரவி மரியா,  அருள்தாஸ்,நெல்லை ராயல்அம்பி, மகேந்திரன்,மீராகிருஷ்ணன் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்களுடன் எம்.ஜி.ஆர்,கவுண்டமணி, ஆகிய பிரபலங்களும் இயக்குநரின் சாமர்த்தியத்தால் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். அது எப்படி? என கேட்டால் சீனி படத்தை பார்த்து தெரிந்து  கொள்ளுங்கள்… அதுவரை சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குநர்  ராஜ துரை.

இவர்களுடன் சீதா என்ற யானையும் சீனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் யானையாக சீனி படத்தில் வரும் சீதா யானை., நிஜத்தில் டிவிஎஸ் கம்பெனி பாரமரிக்கும் யானையாகும். சீதா யானையின் பாகனாக இப்படத்தில் வீரபாகு எனும் பாத்திரத்தில் காமெடி நடிகர் செந்தில் இதுவரை ஏற்றிடாத கனமானதொரு கேரக்டரை ஏற்று  நடித்திருக்கிறார்.

“யானை பங்கு பெறுவதால் மட்டுமின்றி இன்னும் பல சிறப்பு அம்சங்களால் “சீனி” படமும் தேவர் பிலிம்ஸ், தேனான்டாள் பிலிம்ஸ்… படங்களின் வரிசையில் தரமான படமாக இருக்கும்…” எனும் தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வம், “படத்தில் காதல் உண்டு… ஆனால் கவர்ச்சி எனும் பெயரில் ஆபாசம் துளியும் கிடையாது குடும்பத்தோடு பார்க்கும் படமாக சீனி நிச்சயம் இருக்கும்…” என்கிறார்.
தொழில்நுட்பகலைஞர்கள்:இசை:ஸ்ரீகாந்ததேவா,ஒளிப்பதிவு: ஈ.கே.நாகராஜன், எடிட்டிங்:பி. சாய்சுரோஷ், கலை: பாபு, நடனம்: ஐ ராதிகா, சண்டை பயிற்சி: பவர்பாஸ்ட்பாபு, தயாரிப்புநிர்வாகம்: ஆர்.சாமிநாதன், ஆர்.பாண்டியன்.   கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்: ராஜதுரை, தயாரிப்பு:மதுரை ஆர். செல்வம்