யாரும் சொல்லாத கதையாம் மசாலா படம்!

masalapadam1சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய டேர்மினடர், மிசன் இம்பாசிபல்,ஆகிய படங்களை வெளியிட்ட Auraa சினிமாஸ் இந்த மாதம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தை வெளியிட உள்ளனர். இதைத் தொடர்ந்து  All in pictures என்னும் புதியபட நிறுவனம் தயாரிக்க , பிரபல ஒளிபதிவாளர் லக்ஷ்மன் இயக்கத்தில், பாபி சிம்மா,   மிர்ச்சி சிவா நடிக்கும் ‘மசாலா படம் ‘ என்னும் படத்தின் விநியோக உரிமையை பெற்று உள்ளனர்.
‘ இன்று வரும் படங்கள் ஏறத்தாழ ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் தரமாக வந்து கொண்டுதான் இருக்கிறது.என்ன தான்  உணவு  பிரமாதமாக சமைக்க பட்டாலும் பரிமாறப்படும் போது தான் அந்த உணவுக்கான மரியாதையே கூடுகிறது. எங்களது நிறுவனம் நல்ல தரமான் படைப்புகளை தேர்ந்து எடுத்து , அதை உரிய வகையில் மக்களிடம்  சென்று  சேர்க்கும் பணியை  நிறுவனம் செய்யும்.இப்பொழுது எங்களது நிறுவனத்தின் சார்பில் அடுத்து வெளியிடப்பட  உள்ள படம் ‘மசாலா படம்’.பெரிதும் எதிர்பார்க்கப் படும் படம்.சமூக வலைதளங்களில் சினிமாவை விமர்சிப்பவர்களுக்கும் ,அப்படி செய்யக் கூடாது என சொல்லும் திரை உலகினருக்கும் இடையே  நடக்கும் வாதத்தையும், பிரதி வாதத்தையும்  படம் பிடித்துக் காட்டும் கதைதான் ‘மசாலா படம்’.
இயக்குயர் லக்ஷ்மன் மிகவும் சுவாரசியமாக இந்தக் கதையைக் கையாண்டு இருக்கிறார்.இந்தக் கதை நிச்சயமாக   தான், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட யாருக்கும் இப்படி ஒரு கதை தோன்றி இருக்காது.அந்த வகையில் இவ்வளவு வித்தியாசமான கதையை தேர்ந்து எடுத்து தயாரித்த  தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இந்தப் படத்தின் இசையை வெளியிடும் பழம்பெரும் நிறுவனமான லஹரி நிறுவனத்தாருடன் இணைந்து பணி புரிவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
நாளை ‘கேளு மச்சி கேளு , சினிமா பொறந்த  கதை கேளு ‘ என்ற துள்ளலான பாட்டை வெளி இடுகிறோம்.இந்தப் பாடல் ‘மசாலா படம்’ பரிமாறப்பட ரெடி என அறிவிக்கும்’ என்று  கூறினார் auraa cinema நிறுவனர் மகேஷ்.