
‘டூ மூவி பஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திரைப்படத்தில், ஒளிப்பதிவாளராக ஜோ மார்ட்டின் (வில் அம்பு), இசையமைப்பாளராக அஷ்வத் (நளனும் நந்தினியும்), படத்தொகுப்பாளராக வெங்கட் (மிருதன்), கலை இயக்குநராக ரெமியன் (அம்புலி, பண்டிகை) மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக பில்லா ஜெகன் என பல திறமை படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் பணி புரிகிறார்கள்.
“பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு ஏறத்தாழ அதே மாதிரியான கதாப்பாத்திரங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. நான் தேர்ந்தெடுக்கும் கதையும், கதாப்பாத்திரமும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் பதிய வேண்டும். இந்த கதாப்பாத்திரத்தை சாட்னா டைட்டஸ் கன கச்சிதமாக திரையில் பிரதிபலித்து இருக்கிறார் என்று அவர்கள் சொல்லும் தருணங்களை தான் என்னுடைய முழுமையான வெற்றியாக நான் கருதுகிறேன். அப்படி நான் தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கும் இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ நிச்சயமாக தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…”
