பிரபு நடிக்கும் புதிய படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ !

IMG_4183நடிகர் பிரபுவும் ராம்குமாரும்இணைந்து ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வரும் நிலையில், இவர்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதிய தயாரிப்பாளர் உருவாகியிருக்கிறார். ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி துஷ்யந்த் இணைந்து ‘ஈஷான் புரொடக்ஷன்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

இவர்களுடைய இந்த புதிய நிறுவனம் சார்பில் முதன்முறையாக பிரபு நடிக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தில் பிரபு மற்றும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், ஆஷ்னா சவேரி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். அமுதேஷ்வர் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20-ந் தேதிக்கு மேல் தொடங்குகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. ஜனவரி 2-ம் தேதிக்கு மேல் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்காக சென்ற வாரம் இடங்களை தேர்வு செய்ய சென்றபோது, ரஜினியை சந்தித்து தயாரிப்பாளர் துஷ்யந்தும், இயக்குநர் அமுதேஷ்வரும் ஆசி பெற்றுள்ளனர். படத்தின் தலைப்பை கேட்ட ரஜினி மிகவும் சந்தோஷப்பட்டதுடன், நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என்று கூறியுள்ளார்.

மேலும், சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் போலவே சிறந்த படங்களை தயாரித்து, மென்மேலும் இந்நிறுவனம் வளர வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார். புதுமுக நடிகர்களையும், தொழில்நுட்பhf கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் செயல்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் துஷ்யந்த் தெரிவித்துள்ளார்.