ரஜினி முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும் : சரத்குமார் சாடல்!

Rajinikanths-Sarathரஜினி முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும். ரஜினி அரசியலில் இறங்கினால் அவரை முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார்  சரத்குமார் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “ரஜினி சொல்லியிருப்பதுபோல் தமிழ்நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது என்பதெல்லாம் உண்மையில்லை.

நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர். நல்ல நடிகர். மிகப் பெரிய சூப்பர்ஸ்டார்தான். நானும் ஒப்புக்கொள்றேன். அவர் எனது நண்பர்தான். இல்லைன்னு சொல்லலை.. ஆனால் தேவைப்படும்போது மட்டும் கருத்து சொல்வது.. மற்ற  நேரங்களில் தேவையில்லையே என்று அமைதியா இருக்கிறதெல்லாம் கருத்தல்ல.

என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு மாநிலத்தில் இருந்தால்… அந்த மாநிலத்தில் பணிபுரிந்தால்.. அந்த மாநிலத்தின் சட்டவிதிகளுக்குட்பட்டு அந்த தமிழ்க் கலாச்சாரம்,  தமிழ் உணர்வுகளுக்கு மதிப்பவர்கள்தான் இங்கே இருக்க வேண்டும். முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும். அந்த உணர்வை மதிக்கத் தெரிந்தவர்கள்தான் கருத்து சொல்ல வேண்டும். தேவைப்படும்போது கர்நாடகாவில் ஒரு கருத்து… இங்கே ஒரு கருத்து சொல்கிறீர்கள்.க. அதெல்லாம் இங்கே இருக்கக் கூடாது.

நாளைக்கு ரஜினி கட்சி ஆரம்பித்தாலோ.. நான் முதலமைச்சராகப் போகிறேன் என்று சொன்னாலோ அதனை எதிர்க்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். அதில் சந்தேகமே இல்லை..” என்றார்.

rajinikanth-and-sarathkumar

Pin It

Comments are closed.