ராமகிருஷ்ணன்  – தருஷி நடிக்கும்’ டீக்கடை பெஞ்ச்’ ராம் ஷேவா இயக்குகிறார்!

அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “

இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –  வெங்கடேஸ்வர் ராவ்

இசை  –  V.ஸ்ரீ சாய் தேவ்

கலை  –   அன்பு

எடிட்டிங்   –  ஆனந்த்

நடனம்  –  கிரீஷ், ஹபீப்

தயாரிப்பு நிர்வாகம் –  சரவணன்.ஜி  

தயாரிப்பு  –  V.J.ரெட்டி, S.செந்தில்குமார், N.செந்தில்குமார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் –  ராம்ஷேவா.

இயக்குநர் ராம் ஷேவாவிடம்  படத்தைப் பற்றி கேட்டோம்..

இது செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி ,நாயகன் வீட்டிலிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துச்   செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால்  நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடமும் பகையாகிறான்.

இறுதியில் அங்கே நட்பு வென்றதா? இல்லை காதல் வென்றதா என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். ஜனரஞ்சகமான படமாக டீக்கடை  பெஞ்ச்  படம் உருவாகி உள்ளது.

ஐந்து பாடல்களும் சிறப்பாக் இருக்கும்.  கானா பாலா ஒரு பாடலை பாடி நடனமாடி இருக்கிறார்.

படப்பிடிப்பு பழனி கொடைக்கானல் பொள்ளாச்சி சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது   

Pin It

Comments are closed.