ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் ‘கரக்கி’ ஆல்பம்!

Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம் பாடல் !

தமிழ் இசை களத்தில் சுயாதீன ஆல்பம் பாடல்களின் அமோகமான வளர்ச்சி, இங்குள்ள இசை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. Think Music தொடர்ந்து வெளியிட்டு வரும் தொடர்ச்சியான சுயாதீன ஆல்பம் பாடல்கள், நகரம், புறநகர் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் ரசிகர்களின் இதயதங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் பொங்கல் பண்டிகைக்காக ‘கரக்கி’ என்ற தலைப்பில் மற்றொரு அற்புதமான ஆல்பம் பாடலை Think Music வெளியிட்டுள்ளது. ரியோ ரா மற்றும் அம்மு அபிராமி நடிக்க, செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்‌ஷ்மி இப்பாடலை பாடியுள்ளனர்.

இந்தப் பாடலில் நாயகன், நாயகியின் நண்பர்களாக பிரதாப்பும் ஷாலினியும் தோன்றுகிறார்கள். அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஒரு கிராமத்தில் திருவிழாவைக் கொண்டாடும் “கரக்கி” பாடலை அடிக்ரிஸ் இசையமைத்துள்ளார்.

ஒரு ஆணும், பெண்ணும் தங்களின் பரஸ்பர விருப்பத்தை, அன்பை கிராமத்து திருவிழாவின் போது வெளிப்படுத்துவதாக இந்தப்பாடலின் மையம் அமைந்துள்ளது. நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அந்த ஆண், அவனின் விருப்பத்தை அந்தப் பெண்ணிடம் சொல்கிறான். அவள் உண்மையில் அவனை விரும்புகிறாள், ஆனால் அவனிடம் தன் காதலைச் சோதிக்க விரும்புகிறாள், அதனால் அவனது தோளில் ஒரு கனமான கல்லைத் தூக்கும் சவாலை அவன் ஏற்றுக்கொண்டு ஜெயித்தால், அவனது காதலை ஏற்கத் தயாரென தெரிவிக்கிறாள். அவன் கல்லை தூக்கி ஜெயித்ததும், மொத்த கிராமமும் அந்த வெற்றியைக் கொண்டாடுகிறது, மேலும் அந்த பெண்ணும் அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறாள்.