வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள் : இளைஞர்களிடையே வைரமுத்து பேச்சு

vairamuthu-newவீ  கேர் நிறுவனத்தின் பதினைந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை கொடிசியா அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.
 
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து வாடிக்கையாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
 
”தலை முடி நம் பரம்பரையோடு சம்பந்தப்பட்டது . ஒரு தலைமுடியை வைத்து நம் சரித்திரத்தையே சொல்லமுடியும். அப்படிப்பட்ட தலைமுடிக்கு நாம் செய்யும்  துரோகம் என்னவென்று தெரியுமா? குளித்துவிட்டு ஈரத்தலையோடு தலைவாரிக்கொள்வது. அதன் மூலம் வேர்கள் பாதிக்கப்படுகின்றன. நம் தலையில் இருந்து முடி உதிரத் தொடங்குகிறதா? நம் உடலில் எதோ நோய் இருக்கிறது என்று அர்த்தம். தலையை மின் உலர்த்தியைக் கொண்டு உலர்த்தாதீர்கள் அது முடிக்கு கேடு. இயற்கையாக வெயிலில் வைத்து உலர்த்துங்கள். 
 
எனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு திடீரென தோல் தடிமனாக ஆரம்பித்தது. காரணம் ஆறுமாதமாகியும் கண்டிபிடிக்க முடியவில்லை. இறுதியாக துப்பறிந்தார்கள் அவர் தினமும் நாற்பது வருடம் காலை ஆறு மணிக்கு காரில் உட்கார்ந்து வேலைக்கு செல்பவர் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புபவர் என்று. காரிலும் ஏசி .. அலுவலகத்திலும் ஏசி. அவருடைய தோலானது வெயிலையே பார்த்ததில்லை அதனால்தான் தோல் தடிக்கிறது எனக் கண்டுபிடித்தார்கள். தீர்வு அவர் ஒருமாத காலம் தினமும் வெயிலில் நின்று நோயைக் குணப்படுத்தினார். இயற்கையானதையே பயன்படுத்துங்கள். நான் தினமும் நான்கு கருவேப்பிலை இலைகளை கழுவி மென்றுவிட்டுத்தான் வெளியில் கிளம்புகிறேன். முருங்கைக்கீரை, துளசி இலை சாப்பிடுங்கள். இயற்கை முறைக்கு மாறுங்கள். தலைமுடி சரும நோய்களுக்கு மற்றொரு காரணம் குடி. அது எல்லா வகையான கெடுதல்களையும் கொண்டு வருகிறது. இளைஞர்களை சீரழிக்கிறது. ‘என்றவர்,” இளைஞர்களே குடியை விடுவீர்களா?” எனக் கூட்டத்தைப் பார்த்து கவிப்பேரரசு கேட்டபோது எல்லோரும் ஒட்டுமொத்தமாக குடியை ஒழிப்போம் என ஆரவாரம் செய்தது கவிப்பேரரசுவை நெகிழச் செய்தது. vaira-kovai
முன்னதாக ஆடல், பாடல், பேஷன் ஷோ, பரிசுப்போட்டிகள் என வீ  கேர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கொண்டாடினர். நடிகைகள் பியா, பூனம், மீனாக்ஷி தீக்ஷித், பூனம் பாஜ்வா ஆகியோர் நடனமாடினர். அர்ச்சனா பரத் கல்யாண் தொகுத்து வழங்கினர். விசுவின் பட்டிமன்றமும் நடை பெற்றது.
விழாவுக்கான ஏற்பாட்டை செய்திருந்த. வீ கேர் நிறுவனத்தின் நிறுவனர்

பிரபா
ரெட்டி‘மக்களிடையே பெரும் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ள இந்நிறுவனம் 800 பணியாளர்களையும் எட்டு லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டு இவ்வளவு பிரம்மாண்டமாக மாறியிருப்பதற்கு காரணம் தரமும் நம்பிக்கையும் மட்டுமே. இயற்கையான முறைகளையே வலிமையான ஆயுதமாக மக்களின் முன் வைத்திருக்கிறோம். அதற்கான பலன் அவர்கள் எதிர்பார்த்த அளவு அவர்களுக்கு  கிடைக்கிறது என்பதுதான் எங்களின் வெற்றி ‘ ‘ எனக் குறிப்பிட்டார்