‘வாகா’ விமர்சனம்

wagaஇந்திய எல்லை பாதுகாப்புப் படையிலிருக்கும் விக்ரம் பிரபு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரு பெண்ணை ப்பார்த்து காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பிறகுதான் தெரிகிறது ரன்யாராவ் ஒரு பாகிஸ்தானி என்று அவரை பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக தப்பிக்க வைக்க உதவும் போது அங்குள்ள ராணுவத்தில் சிக்கிக் கொள்கிறார். சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப் படுகிறார். பல கொடுமைகளை அனுபவிக்கிறார்.அங்குள்ளவர்கள் காதலியையும் கொல்ல உத்தரவிடுகின்றனர்.

முகாமிலிருந்து விக்ரம் பிரபு தப்பித்தாரா? காதலியை கைப்பிடித்தாரா என்பதே ‘வாகா’ கதை.

இந்திய எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் காணாமல் போவதும் தலைதுண்டிக் கப்பட்டு இறப்பதும் வழக்கமாகிவருகிறது. ஏன் என்பது பற்றிய டிவி விவாதத்துடன் படம் தொடங்குகிறது.

தென்தமிழ் நாட்டிலிருந்து ராணுவத்துக்குச் செல்கிறார். விக்ரம்பிரபு. ஆனால் விரும்பிப் போகாமல் தினமும் அரசாங்க செலவில் மது அருந்ததத்தான் போவதாகப் காட்டியிருப்பது. இயக்குநரின் பொறுப்பற்றத் தனம். ராணுவ வீரர்களின் சேவையை கேலிக் குரியதாக்குகிறது.

போனவர் அங்கு எல்லையில் புரியும் சாகசங்களை போராட்டங்களைக் காட்டாமல் காதலியைச் சுற்றி வழிவதாகக் காட்டியுள்ளது தமிழ் சினிமாவின் சாபமான காதல் கற்பனை .

ராணுவத்துக்கான பயிற்சியை மட்டும் விலாவாரியாக காட்டியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் விக்ரம் பிரபு ஆண்மை மிளிர மின்னுகிறார். காதலிக்கும் காட்சிகளில் அளவான நடிப்பு .ரன்யாராவ் காஷ்மீர் தேவதையாக வருகிறார் பாக் ராணுவத்திடம் தன் குடும்பம் சிக்கித் துன்புறும் போது நடிப்பிலும் கவர்கிறார்.

காஷ்மீரின் பனிமலை பள்ளத்தாக்குகளின் அழகு பாடல் காட்சிகளில் பளிச்சிடுகிறது. பாக்கிஸ்தானாக நம்ப வைக்கும் இடங்களும் அப்படியே .ஆனால் பின்னணியை மட்டும் நம்பிய அளவுக்கு அழுத்தமான காட்சிகளை நம்பாதது பலவீனம். அடர்த்தியான காட்சிகள் இல்லாதது குறைதான். இமான் அடக்கியே இசைத்துள்ளார்.வாகா எல்லைப்பகுதியின்  ராணுவ அணிவகுப்பு பிரசித்தி பெற்ற ஒன்று.அது பற்றிய பின்னணியோ காட்சிகளோ இல்லாதது குறை.ஹரிதாஸ் இயக்கிய இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனா  இதை இயக்கியுள்ளார் ? நம்பமுடியவில்லையே