‘வானவில் வாழ்க்கை’ ஒற்றைப் பாடல் வெளியீடு

இசை என்றாலே நினைவுக்கு வருவதுநடனம். இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் முதன்முறையாக இயக்கும் வானவில்வாழ்க்கை  திரைப்படத்தின்  Single Track  ரிலீஸ் james3மற்றும் ,நடனவிழா இவ்விரண்டையும்  ஒருங்கிணைத்து நேற்று  மாலைகாமராஜர் அரங்கில் வழங்கியது.

வானவில்வாழ்க்கை‘ பாடல் வெளியீட்டை உலகெங்கிலும் உள்ளநடனம் பயிலும் இளைஞர்கள் பங்குபெறும் ‘JB’s டான்ஸ்சாம்பியன்ஷிப் 2014’ என்ற நடனநிகழ்ச்சியில் நடத்ததிட்டமிட்டு நடத்தியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ்வசந்தன். இப்போட்டியை பிரபல நடன இயக்குநர் ஜான்பிரிட்டோ நடத்தினார் .

‘இப்போட்டிபள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என  மூன்று பிரிவினருக்கு நடத்தப்பட்டது. இத்தகைய புதுமுயற்சியை மெருகேற்றுவது  போல்அமைந்தது ஜேம்ஸ்வசந்தன் அவர்களின் இந்த ஒற்றை பாடல்  வெளியீட்டு நிகழ்ச்சி ‘ எனக்கூறி  மகிழ்கிறார் நடன இயக்குநர்  ஜான்பிரிட்டோ.

‘நான்  இயக்கும் முதல்படத்தின் இசையை வித்தியாசமான முறையில் வெளியிட இப்போட்டி மேடைசரியானதாக அமைந்தது. இந்த ஒற்றைப் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் ‘ என்றும் , ‘இப்படத்தின் பாடல்கள் வெளியீடு  பிரம்மாண்டமாய் நடைபெறற்றது’ என்றும்  பெருமிதத்தோடு கூறுகிறார், வானவில்வாழ்க்கை‘ படத்தின் இசையமைப்பாளரும் இயக்குநருமான ஜேம்ஸ்வசந்தன் .

vaanavil222

 

 

 

 

 

Pin It

Comments are closed.