விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “

cptn-22rsபுரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியன்  இணைந்து ‘தமிழன் என்று சொல்   ‘எனும் படத்தில்  நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்படத்தின் இசை – ஹிப்-ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு – கொலஞ்சி குமார், சண்டை பயிற்சி- ஸ்டண்ட் சில்வா, எடிட்டிங் -வரதராஜன், கலை -விஜய ஆதிநாதன், நடனம்- பிருந்தா, தினேஷ், ஸ்ரீதர், VFX- மோகன்.
 இப்படத்தை புதுமுக இயக்குநர் அருண் பொன்னம்பலம் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை வரும் ஞாயிறு (22.11.2015)காலை  9 மணிக்கு ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது.
cptn1