விஜய்சேதுபதி – ரம்யா நம்பீசன் நடிக்கும்’அராத்து’

Vijay sethuவிஜய்சேதுபதி – ரம்யா நம்பீசன் நடிக்கும் புது படம் ‘அராத்து’

‘ப்ரியமுடன்’, ‘யூத்’, மற்றும் ‘ஜித்தன்’ படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றியுள்ளார்.

பல வெற்றி படங்களை தந்துள்ள ப்ரியமுடன் ஷெல்வா தனது அடுத்த படமான ‘அராத்து’ திரைப்படத்தின் வேலைகளில் தீவிரம் ஆகியுள்ளார்.

“உண்மை சம்பவங்களின் அடிப்படையில்  வடசென்னையை களமாகக் கொண்டது இப்படம். கதையின் யதார்த்தம் குறையாமல் எடுக்க திட்டமிட்டுளோம். அழகிய காதலையும், முரட்டு தனத்தையும் முறையே சரிசமமாக கொண்டதுதான் ‘அராத்து’.

படத்திற்கு புத்துணர்வு தரும் வகையில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். ‘ டங்கா மாரி’ புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி பாடுகிறார். ‘அராத்து’ கதைக்கான வடசென்னையை நாங்களே வடிவமைத்து  செட் அமைத்துள்ளோம். இது கதைக்கு மேலும் வலு சேர்க்கும்.” எனக் கூறினார் ப்ரியமுடன் ஷெல்வா.