விஜய் ஆண்டனி ஒரு சைத்தான் : தயாரிப்பாளர் டி சிவா

img-15“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” என்று ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் தயாரிப்பாளர் டி சிவா

தன்னுடைய திரைப்படங்களுக்கு  எதிர்மறையான தலைப்புகளை தேர்வு செய்து அதன் மூலம் வெற்றி வாகை சூடி வருவது  விஜய் ஆண்டனியின் தாரக மந்திரமாக இருக்கிறது. அந்த வகையில் அவருடைய அடுத்த படமான ‘சைத்தான்’ ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருவது மட்டுமின்றி அவர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சைத்தான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவே அதற்கு சிறந்த உதாரணம்.
விழாவில் தயாரிப்பாளர்  ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா  பேசும் போது, “திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி. ‘தன்னம்பிக்கை’ என்னும் புத்தகமாக செயல்படும் அவரின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருப்பவர், அவருடைய துணைவியார் பாத்திமா விஜய் ஆண்டனி தான்.

img-9“விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு, நான் அவருடைய ரசிகனாக ஆகிவிட்டேன். அவர் தேர்ந்தெடுத்து நடித்த  ஒவ்வொரு திரைப்படமும் என் மனதோடு ஒட்டிப் பயணிக்க கூடியதாகத்தான் இருக்கும்…. தற்போது அவருடைய ‘சைத்தான்’ அவதாரத்தை காண நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர் ‘ஆரா சினிமாஸ்’  மகேஷ் கோவிந்தராஜ் இந்த சைத்தான் திரைப்படத்தோடு இணைந்திருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ‘சைத்தான்’ திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்….” என்று கூறினார் தயாரிப்பாளர் டி சிவா.

” என்னுடைய மகன் விஜயின் வளர்ச்சியை கண்டு நான் எப்படி மகிழ்ச்சி கொள்கிறேனோ, அதேபோல் தான் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியையும் கண்டும் நான் ஆனந்தம் கொள்கிறேன்…” என்று உற்சாகமாக கூறினார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்.img-61

தெலுங்கில் ‘பெத்தலுடு’ என்று தலைப்பிட பட்டிருக்கும் ‘சைத்தான்’ திரைப்படம் அந்த மாநிலத்தில் 600 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.