விமலிடம் நான் வாங்கிய அடி; புன்னகைபூ கீதா

Kaaval Press Meet Stills (20)விமல்-புன்னகைபூ கீதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘காவல்’. இப்படத்தை நாகேந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விமல், அஸ்வின், இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் தேவா, சமுத்திரகனி, எடிட்டர் பிரவின், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், இயக்குநர் நாகேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் நாயகி புன்னகைபூ கீதா பேசும்போது, ‘விமல் என்னை இந்தப் படத்தில்அடித்து  புரட்டிப் போட்டு விட்டார். இந்தப் படத்தில் விமல் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் அடிப்பட்டதோ எனக்குதான். ஆக்‌ஷன் காட்சிகளில் இவருடன் நான் இருக்குபடியான காட்சிகள் படத்தில் உள்ளன. அதை படமாக்கும்போதெல்லாம் எனக்கு நிறைய அடி பட்டது. எனக்கு ஒரு டூப் வைத்தார்கள். ஆனால், நான்தான் நிறைய காட்சிகளில் நடித்தேன். இப்படம் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். ஒரு சோசியல் மெசேஜ் இந்த படத்தில் இருக்கிறது’ என்றார்.

சமுத்திரகனி பேசும்போது, ‘இந்தப் படம் இளைஞர்கள் விரும்பும் படமாக இருக்கும். தற்போது உள்ள இளைஞர்கள் கெட்ட வழியில் செல்கிறார்கள். அவர்களை சீர்படுத்தும் படமாக இருக்கும். எல்லாருக்கும் இந்தப்படம் கண்டிப்பாக பிடிக்கும்’ என்றார்.

விமல் பேசும்போது, ‘இது ஒரு நல்ல படம். மெசேஜ் உள்ள படம். எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்’ என்றார்.

இயக்குநர் நாகேந்திரன் பேசும்போது, ‘நான் நிறைய பேரிடம் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறேன். சீமானிடம் நிறைய படங்களுக்கு உதவியாளராக இருந்திருக்கிறேன். எல்லா இயக்குனர்களும் என்னுடைய நண்பர்கள்தான். இந்தப்படத்தில் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சென்னையில் பணத்திற்காக நிறைய கொலைகள் நடக்கின்றன. இந்த கதையை முதலில் சமுத்திரகனியிடம் சொன்னேன். அவருக்கும் மிகவும் பிடித்தது. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். இந்தப்படத்தை அனைவரும் ரசிக்கும் படியாக எடுத்திருக்கிறேன்’ என்றார்.