விமானிகள் எடுக்கும் வித்தியாசப்படம்!

Ra Movie Stills (1)தமிழ்ச் சினிமாவில் இன்று படித்தவர்களின் வரவு அதிகரித்து வருகிறது. லேட்டஸ்ட் உதாரணமாக. இரண்டு விமானிகள் வந்துள்ளனர். ஒருவர் நாயகன் அஷ்ரப். இன்னொருவர்  பிரபு யுவராஜ் இயக்குநர். படம் ‘ர’

பிளான் ஏ ஸ்டுடியோஸ் அமீன் அக்பர் தயாரித்துள்ள சிறப்பு ஓர் தமிழ் எழுத்து திரைப் படம் ‘ர’. பண்டைய தொல்காப்பிய நூலில் இருந்து ஆராய்ந்து எடுத்த தலைப்பு இது. ‘ர’ என்றால் “கொண்டு செல்லுதல் ” என்று அர்த்தம். இந்த திரைப்படம் முதல் முறையாக தமிழ் சினிமா வரலாற்றில் புதிய பரிமாணம். பிரம்மாண்டமான பேரழிவு நிகழ்வு ,அஜய் என்கிற இளம் நாயகனின் காதல், வாழ்க்கையில் ஏற்பட்ட துயரசம்பவ ங்கள், இளம் நாயகனின் மனதில் மிக அழுத்தமாக ஏற்பட்ட காயங்கள், தவிப்பு, இவற்றுடன் திடுக்கிடும் சம்பவங்களை மையமாகவைத்து உருவான  ‘ர’ தமிழ்த் திரைப்படமாக வெள்ளித்திரையில் மின்ன உள்ளது.
Ra Movie Stills (14)
இந்த திரைப்படத்தின் எண்ணம் எழுத்து, கதை ,திரைக்கதையை  நாயகன் அஷ்ரப், பிரபுயுவராஜ் இணைந்து எழுதி உள்ளார்கள். பிரபு யுவராஜ் இந்த ‘ர’ படத்தை முதன் முறையாக இயக்கி உள்ளார்.இவர்கள் இருவரும் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனத்தில் பயணிகள் விமானம் இயக்கி வருகிறார்கள் .இவர்களின் வித்தியாசமான எண்ண ஓட்டங்களையும் சிந்தனைகளையும் பிரதிபலிக்கும் திரைச்சித்திரம் ‘ர’ . இப்படத்தின் நாயகி அதிதி செங்கப்பா. இவர் தற்சமயம் “ருத்ரமாதேவி” என்ற தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார்.  இரண்டாவது நாயகனாக நடிக்கும் லாரன்ஸ் ராமு இப்படத்தின் பாடல்களை எழுதி உள்ளார். இவர் புகைப்படம் ,உத்தம புத்திரன் படங்களில் நடித்து உள்ளார். ஜெபிஜெய் இந்தப் படத்தின் காவல்துறை விசாரணை அதிகாரியாக வருகிறார் இவர் சம்திங் சம்திங், பீமா படத்தில் முன்னோடி வில்லனாக நடித்து இருக்கிறார்.

‘ர’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ர. சரவணன், இந்தப்படத்தில் ரசிகர்களின் பார்வையை திரையை நோக்கி மட்டுமே பார்க்கவைத்திருக்கிறார் .இவர் ‘சொன்ன புரியாது’என்ற திரைப் படத்தில் பணியாற்றி இருக்கிறார் . ‘ர’ திரைப் படத்தின் இறுதி கட்டமைப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன  ‘ர’ இம்மாத இறுதியில் வெள்ளித் திரையில் பளிச்சிடும்.