விவேக் -தேவயானி நடிக்கும் ‘எழுமின்’ படம் தொடங்கியது!

டிகர்  விவேக், நடிகை தேவயானி இருவருக்கும் முக்கியத்துவம் உள்ள ‘எழுமின்’ என்கிற படத்தின் தொடக்க விழா  நடைபெற்றது.     

காமெடி நடிகராக அறியப்பட்ட விவேக் சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர். 

சமீபகால திரைப்படங்களில் நாயகனுக்கு அப்பா ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் விவேக் இப்போது ‘எழுமின்’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில், தேவயானி முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். 

இப்படத்தை வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இயக்குகிறார். இவர், சமீபத்தில் வெளியான ‘உரு’ திரைப்படத்தையும் தயாரித்துள்ளார் என்பது நினைவில் கொள்ளவேண்டியதாகும். 

விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்  ‘எழுமின்’படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்  தொடங்கியது.