விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்!

 audio-vslபத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கத்தில் உருவாகும் ‘தக்கன

பிழைக்கும் ‘குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு தாங்கள் அளித்த
ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ’தக்கன
பிழைக்கும்’ குறும்படத்தின் டீஸரை நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும்
தங்கள் ட்விட்டர்  அக்கவுண்டில் இன்று வெளியிட்டார்கள்.

     டீஸரை வெளியிட்ட ஆர்யா ‘’ராஜீவ் காந்தி ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறார்
என்றவுடன் அவரது இயல்பு போலவே ஏதோ ஜாலியாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.
ஆனால் டீஸர் மிகவும் சென்சிபிளாக, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்
டீஸராக அமைந்திருக்கிறது. படத்தை பார்ப்பதற்காக நானும்
காத்திருக்கிறேன்’’ என்று பாராட்டினார்.

     விஷால் ‘’குறும்படத்தோட டீஸரே நல்ல இண்ட்ரெஸ்டிங்கா
கொடுத்துருக்கார் ராஜீவ். விரைவில் சினிமாவுக்கும் வந்து நல்ல நல்ல
படங்களை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்றார்.

      ’’சென்ற ஆண்டு நான் விஷால் அவர்களை பேட்டி எடுக்கும்போது,
சினிமாக்குள்ளயும் அரசியல் வந்துடுச்சு போல? என கேட்டதற்கு  ’இது காடு
மாதிரி. எல்லாமே சர்வைவலுக்காக தான். மானை நோக்கி புலி வந்தா மான் தான்
தன்னை காத்துக்கணும். இப்படித்தான் சினிமா மாறிட்டு இருக்கு. அவங்கவங்க
சக்திக்கு தகுந்தா மாதிரி ஓடறோம்.அது தப்புனு சொல்ல முடியாது’ என்று
பதில் சொன்னார். அவர் சொன்ன பதில் தான் இந்த படத்தின் கரு. டீஸரே அதை
சொல்லும். படம் விரைவில் திரையுலகினர், பத்திரிகையாளர்கள் முன்னிலையில்
திரையிடப்படும்’’ என்றார் க.ராஜீவ் காந்தி.

த நெக்ஸ்ட் ஸ்டெப் புரடக்‌ஷன்ஸ் வழங்கும்

                              தக்கன பிழைக்கும்

​ ​

படத்தில் பணிபுரிந்தவர்கள்

நடிகர்கள்

விஷ்வா

கிருஷ்ணா

புவனேஷ்வரி

நிரூபன்

பரசுராமன்

ஒப்பனை – சூர்யா, ஜோசப்

டிசைன்ஸ் – த.கண்னதாசன்

ஒலிப்பதிவு – ஆலன் சுபாஷ்

இணை இயக்குநர் – ஸ்ரீதரன் தங்கவேல்

உதவி இயக்குநர் – மணிமாறன்

இணை ஒளிப்பதிவு – ஆர்.டி.கார்த்திக், ராஜேஷ் மேத்யூ

மக்கள் தொடர்பு – ஜான்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு – கே.ஆர்.அருண் கிருஷ்ணா

எழுத்து, இயக்கம் – க.ராஜீவ் காந்தி

டீஸர் லின்க்…

https://www.youtube.com/watch?v=VvRwXhTyC2c