வி4 விருதுகள் வழங்கும் விழா 2015!

actors222இந்திய சினிமாவின் 102-வது ஆண்டை முன்னிட்டும் தமிழ் சினிமாவின் 83-வது ஆண்டை கொண்டாடும் வகையிலும் தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை ‘வி4’ விருது வழங்கி கௌரவப்படுத்துகிறது. இதற்கான விழா வரும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டில் காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. நடிகர் சத்யராஜ் தலைமையில், பிரபு, நெப்போலியன் ஆகியோர் முன்னிலையில் கலையுலக பிரம்மாக்களை கௌரவப்படுத்துகிறார்கள்.

இந்த விழாவில், நடிகை மனோரமா, மித்ரதாஸ், டி.கே.எஸ்.நடராஜன், என்.கே.விஸ்வநாதன், பி.லெனின், சிவசங்கர், பிலிம் நியூஸ் ஆனந்தன், ரங்கநாயகி, வியட்நாம் வீடு சுந்தரம், கணேஷ் (சங்கர்), தோட்டா தரணி, ஜூடோ ரத்னம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருதும், இயக்குநர் சேரனுக்கு சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

2014-ஆம்ஆண்டில்சாதனை புரிந்த நடிகர்,நடிகைகள்மற்றும் தொழில்நுட்பகலைஞர்களை பாராட்டிகேடயம் வழங்கப்படுகின்றது. இவ்விழாவில் லஷ்மண் ஸ்ருதி இசைநிகழ்ச்சியும், காயத்திரி ரகுராமின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.