வெளிநாட்டில் அசோக் செல்வன் – பிந்துமாதவி பாடல் காட்சி

savalesamali1நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ்  பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படம் “ சவாலே சமாளி “     இந்தப் படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.  பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார்.  முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்திதாஸ், வையாபுரி, பறவைமுனியம்மா, சிசர்மனோகர், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு   கவிதாபாண்டியன்,  S.N. ராஜராஜன்        கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  சத்யசிவா.    படம் பற்றி இயக்குநர் சத்யசிவாவிடம் கேட்டோம்.,

இந்த படத்திற்காக சுவிட்சர்லாந்தில் அசோக்செல்வன், பிந்துமாதவி பங்கேற்ற

“ எத்தனை கவிஞன் savalesamali22

எழுதி பார்த்துட்டான்

காதல்  தீர்ந்து  போகல

எத்தனை நடிகன்

நடிச்சிப் பார்த்துட்டான்

காதல் போரே அடிக்கலே  “ என்ற பாடல் படமாக்கப்பட்டது.  நாங்கள் போன போது குளிர் வாட்டி எடுத்து விட்டது. ஆனால் திட்டமிட்ட படி பாடல் காட்சிகளை எடுத்து முடித்தோம். அதற்கு முக்கிய காரணமே அசோக்செல்வன், பிந்து மாதவி, டான்ஸ் மாஸ்டர் தினா மூவரும் தான். மிக கடுமையாக உழைத்தார்கள்.

படம் படு ஜாலியாக இருக்கும்.  செப்டம்பர் மாதம் 4 ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது என்றார் இயக்குநர் சத்யசிவா.