வெளிப்படையாகப் பேசி வெற்றி பெறும் வியாபாரி உதயநிதி: புதுமுக இயக்குநர் பேச்சு

Press Meet Stills (10)மொபைல் போனை மையப்படுத்தி உருவாகியுள்ள  கதையான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தின் ஊடக சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது. இந்த மகிழ்ச்சியில் படக்குழுவினர் வாயெல்லாம் பல்லாக பேசினார்கள்.

“படமெடுப்பதைவிட வெளியிடுவது சிரமம். அதை எடுத்த பிறகுதான் உணர்ந்தோம்.ரெட்ஜெயன்ட் வாங்கியதும் பெரிய வெற்றி கிடைத்த திருப்தி. அதை எப்படி கொண்டு சேர்ப்பது என்று அவர்களுக்குத் தெரியும்.குறைகள் சொல்லி விலையைக் குறைப்பது வியாபார தந்திரம் .இவர் அப்படி எதுவும்
குறைகள் சொல்லி விலையைக்குறைக்கவில்லை. எல்லா வியாபாரிகளும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்திருந்த என் கருத்தை உடைத்தார் உதயநிதி ஸ்டாலின்சார்.நேரடியாகஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசி வெற்றி பெறும் வியாபாரிகளும் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் உதாரணம்  “என்றார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா.

“இந்தப் படம் நன்றாக இருந்ததால் நான் தான் கேட்டேன். சில நாட்களிலேயே படத்தை வாங்க முடிவு செய்தேன்.”என்றார் உதயநிதி ஸ்டாலின்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வி.சந்திரன், நடிகர்கள் நகுல், சதிஷ், நடிகைகள் பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், மதன் கார்க்கி, எடிட்டர் சாபுஜோசப் போன்றவர்களும் பேசினார்கள்.

‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படம் வரும் 20ஆம் தேதி வெளியாகிறது.

Press Meet Stills (13)