வெளியான சிறிது நேரத்திலேயே வைரலான ‘சைத்தான்’ டீசர் !

saithan1ஒரு நடிகராக அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல… அதற்கு கடின உழைப்பு மிக அவசியம்…பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் உள்ளத்திலும் அபிமானம் பெற்று இருப்பவர் இசையமைப்பாளர் – நடிகர் விஜய் ஆண்டனி. குறிப்பாக அவருடைய யதார்த்தமான நடிப்பும், தனித்துவமான  கதைக் களங்களை தேர்ந்தெடுக்கும் திறமையும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது…அதன் பயனாக தற்போது வெற்றி என்னும் ஒரு வழிப் பாதையில் பயணித்து வருகிறார் விஜய் ஆண்டனி. மொழிகளை தாண்டி,  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின்  வர்த்தக – வணிக  சந்தையில் தனக்கென சிறந்ததொரு வெற்றி அடையாளத்தைப் பதித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.
தனது வெற்றிப் பயணத்தை செம்மையாக தொடர்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, விரைவில் வெளியாக இருக்கும் தனது ‘சைத்தான்’ திரைப்படத்தின் டீசரை யூடூப்பில் இன்று வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களிலேயே இது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்துவிட்டது. ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து இருக்கும் இப்படத்தை இயக்கி இருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
வியாபார உலகிலும், வர்த்தக உலகிலும் அமோக வெற்றியை பெறும் அனைத்து சிறப்பம்சங்களும் இப் படத்தில் நிறைந்திருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் விஜய் ஆண்டனி என்று சொன்னால் அது மிகையாகாது. குடும்பங்களுக்கு ஏற்ற விதத்தில் சஸ்பென்ஸ், அதிரடி, திரில்லர் என வலுவான கலவையில் உருவாகி இருக்கிறது. தீபாவளி திருநாளன்று, தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வர இருக்கிறது. ‘ஆரா சினிமாஸின்’ சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் இந்தப்  படத்தை தமிழில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
Teaser link: