வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்

akshay-kumar-top-actorசென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுள்ளங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ரூபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.

சென்னையின் மக்களின் நிலைமையைக் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய  அக்ஷ்ய் குமார் இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களை தொடர்பு கொள்கையில், அவர் சுஹாசினி மணிரத்னம் அவர்களை தொடர்பு கொள்ளக் கூறியுள்ளார்.

சுஹாசினி மணிரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ருபாய் 1 கோடி ருபாய் காசோலையை நடிகர்  அக்ஷ்ய் குமார் அளித்துள்ளார்.

பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது.

தற்போது  அக்ஷ்ய் குமார் கத்தி படத்தின் ஹிந்தி பதிப்பில் இயக்குநர் .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.