வேடிக்கை பார்த்த மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த படக்குழு!

vethuvettu2ஒரு படக்குழுவினர்  வேடிக்கை பார்த்த மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்தனர்

விபின் மூவி பட நிறுவனம்   தயாரிக்கும் படத்திற்கு “ வெத்து வேட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்.   ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.  கதாநாயகியாக ‘விழா’ பட நாயகி மாளவிகாமேனன் நடிக்கிறார்.மற்றும் இளவரசு,கஞ்சாகருப்பு,ஆடுகளம்நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன்மனோகர், போண்டாமணி, வெங்கல்ராவ், சின்னசில்க் உமா,நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில்சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கலை  –  உமாசங்கர் , ஒளிப்பதிவு    –   காசி    .யுகபாரதி பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைக்கிறார்.

நடனம்   –  தினா , ஸ்டன்ட்    –  ஆக்ஷன்பிரகாஷ்

தயாரிப்பு  –   எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவணமாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.மணிபாரதி.

படம் பற்றி இயக்குநர் மணிபாரதியிடம் கேட்ட போது…

”கிராமத்து காதலை மிக யதார்த்தமாக இதில் பதிவு செய்திருக்கிறோம். ஜனரஞ்சகமான இளைஞர்களுக்கு பிடித்த காதல் படமாக இது இருக்கும். எழுபது சதவீதம் காமெடி, இருபது சதவீதம் காதல் மற்றும் குடும்பம் சென்டிமென்ட் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

படத்தின் பாடல் காட்சிகளுக்கு பத்து நாட்களுக்கு 300 துணைநடிகர்கள் வரவழைக்கப் பட்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டது.  கதா பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்து பாராட்டினர்.  இந்த படத்தின் படிப்பிடிப்பு கடைசி நாள் அன்று படப்பிடிப்பிற்கு உதவிய திருச்சி அருகில் உள்ள கோப்பு என்ற கிராம மக்கள் ஐநூறு பேருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தோம் அவர்கள் அனைவரும் படக்குழுவினரை படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள்.

படப்பிடிப்பு திருச்சி, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது” என்றார் இயக்குநர் எஸ்.மணிபாரதி.