‘வேலைக்காரன் ‘பட வேலைகள் முடிந்தன!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பேராதரவு பெற்று கொண்டாடப்படும். சிவகார்த்திகேயன் , நயன்தாரா , பகத் பாசில் நடிப்பில் , மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வேலைக்காரன் ‘ படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை ’24AMSTUDIOS’ நிறுவனத்தின் சார்பில் திரு. R D ராஜா தயாரிருக்கின்றார். அனிருத்தின் இசையில் இப்படம் உருவாகிவருகிறது. ‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் ‘இறைவா’ சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. யு டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டி மேலும் பலமாக கலக்கிக்கொண்டு வருகிறது இப்பாடல் என்பதே தற்போதய செய்தி.

வெகு சில பாடல்களே இந்த சாதனையை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து Post Production பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றது. ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்தது.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் , ரூபனின் படத்தொகுப்பில் , முத்துராஜின் கலை இயக்கத்தில் ‘வேலைக்காரன் ‘ உருவாகியுள்ளது.

 “வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி அந்த படத்தின் கடை நிலை ஊழியர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களை கவுரவிக்கும் வகையிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒரு விழா நடந்தது.
  
விழாவில்” திரைப்படம் என்பது கலை சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. மனித உணர்வுகளும், நன்றி உணர்வும் மேலோங்கி இருக்க வேண்டிய துறை கூட. இரவு பகல் பாராமல் இந்த படத்துக்காக உழைத்த இந்த உன்னத நெஞ்சங்களுக்கு நன்றி சொல்ல தருணம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி. பணம் என்ற விஷயத்தை தாண்டி எந்த ஒரு கலைஞனுக்கும் கவுரவம் ஒரு முக்கிய விஷயம். நானும் அடிப்படையில் ஒரு தொழிலாளி என்பதால் அவர்களின் உணர்வு புரியும். அந்த புரிதலின் வெளிப்பாடு தான் இந்த விழா”  என்றார் 24 A M  ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.
Pin It

Comments are closed.