‘வேலையில்லா பட்டதாரி 2’ விமர்சனம்

எளியஇளைஞர்களை கிள்ளுக்கீரையாக நினைக்ககூடாது அவர்களைச்சீண்டினால் வெற்றி பெறுவார்கள் என்கிற சூத்திரமே வேலையில்லா பட்டதாரி கதை.

அதே சூத்திரமே விஐபி 2 -லும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விஐபி 1 படத்தில் எளிய கதை, பண பலம் உள்ளவன் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால், இளைஞர் சக்தி அதை விட பெரியது என்று காட்டியிருப்பார்கள்.

இதில் கொஞ்சம் பெரிய பட்ஜெட் அவ்வளவு தான், கஜோல் என்கிற எல்லோரும் தெரிந்த முகம் கூடுதல் பலம்.

 விஐபி 2 – கதை என்ன ?

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரும்  கட்டுமானநிறுவனம்வைத்திருப்பவர் கஜோல். அவர்  எடுக்கும் புராஜக்டில் தனுஷும் உள்ளே வர, பிறகு இவர்களுக்குள் நடக்கும் சவாலே சமாளி மோதல்தான் மீதிக்கதை.

தனுஷ் என்ற ஒரு தனி ஆள் தான் மொத்த படத்தையும் தோளில் சுமக்கின்றார். குடித்துவிட்டு மனைவியிடம் திட்டு வாங்குவது, அதற்கு அப்பா ஆறுதல் சொல்வது என நடுத்தர இளைஞரை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

கஜோல் எத்தனை வருடம் கழித்து நடிக்க வந்தாலும், அந்த மவுசு குறையவே இல்லை. ஆனால், அவருக்குரியது அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்பதே நிஜம்.

விஐபி-1 மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் படத்தில் உள்ள யதார்த்தம் தான், அந்த யதார்த்தம் இதில் கொஞ்சம்  தவறியதோ என யோசிக்க வைக்கிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குநராக இப்படத்தில் வெற்றி பெற்றுவிட்டார், இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

இதற்கு முக்கிய காரணம் கஜோல் போல் ஒரு நடிகையின் பெயரையும் கெடுத்துவிடக்கூடாது. அதே நேரத்தில் தனுஷையும் மாஸாக காட்ட வேண்டும் என்பதில் கொஞ்சம் சறுக்கிவிட்டார்.

அப்பா சமுத்திரக்கனி அளவான யதார்த்தமான நடிப்பு.  பிரமையாக அம்மா சரண்யாவை பயன்படுத்திய விதம் அழகு. 

விவேக் காமெடி நன்றாக வந்துள்ளது. 

சென்னை வெள்ளத்தை காட்டியுள்ள விதம் புத்திசாலித்தனம்.அதை வைத்து இன்னமும் காட்சி அழுத்தம் காட்டியிருக்கலாம்.

ஷான் ரோல்டன் என்ன தான் பாடல்கள், இசை என அடித்து நொறுக்கினாலும்,  சிறிதே வரும் அனிருத்தின் பிஜிஎம் தியேட்டரே அதிர்கின்றது. 

தனுஷின் யதார்த்த நடிப்பு, படத்தின் முதல் பாதி, சரண்யாவை பயன்படுத்திய விதம், முதல் பாதியில் இருக்கும் சில விஷயங்களை இரண்டாம் பாதியில் சரியாக அமைத்த தருணம் என அனைத்தும் ரசிக்க வைக்கின்றன  .நட்சத்திர பலத்தை நம்பி கதையில் முழுக்கவனம் செலுத்தவில்லை.

மொத்தத்தில் விஐபி என்கிற  எதிர்பார்ப்பு முத்திரை விஐபி-2வையும் காப்பாற்றுகிறது.

Pin It

Comments are closed.