வைபவ் காதலுக்கு நான்தான் எதிரி : அர்ஜுனன்

arjunan2காதலில் சொதப்புவது எப்படி, அரிமா நம்பி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில்  கதாநாயகனின் காதலுக்கு உதவி புரிந்த அர்ஜுனன்  ‘கப்பல் ‘ படத்தில் காதலுக்கு வில்லனாக வருகிறார்.

இப்படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி விவரிக்கும்பொழுது, ” இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கார்த்திக் என்னை அழைத்தபோது, ‘கப்பல் ‘  படம் கடல்ல எடுப்பாங்க அது நமக்கு செட் ஆகாதுன்னு சொல்லிடலாம்னு வந்தேன். அனால், இங்கு கதைக்கும் கடலுக்கும் சம்மந்தமில்லன்னு ஆரம்பிச்ச இயக்குநர் கதை சொல்லி முடிச்சவுடன்  நான் இந்த கப்பலை விடாமல் பிடித்துக்கொண்டேன்.”

கதையின் ஒரு பாகமாய் வரும் என் கதாபாத்திரம், நட்பின்மேல் உள்ள அதீத அன்பின் காரணமாக வைபவ்- சோனம் பாஜ்வா காதலை பிரிக்கும் நண்பர்களாக வருகிறோம் நான், கருணா மற்றும் இருவர். நாங்கள்தான் வைபவ் காதலுக்கு வில்லன்கள் என்றும் சொல்லலாம்.” என்று கூறினார்

இசைஞானி அவர்களின் “ ஊரவிட்டு ஊரு வந்து” ரீமிக்ஸ் பாடலின் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது. சென்னையின் நெரிசலான பல இடங்களின் நடனமாடி படமாக்கியுள்ளோம். இது ரசிகர்களை கவரும்.”

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘I’ ஸ்டுடியோஸ் நிறுவனம் மிகுந்த நேர்த்தியாக இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை சங்கர் சாரின் ‘S’ பிக்சர்ஸ் பிரம்மாண்டமாய் மாற்றியுள்ளது இது எனக்கு சங்கர் சார்  படத்தில் நடித்த மகிழ்ச்சியை தருகின்றது.” என்றார் அர்ஜுனன்.