ஸ்கெட்ச் : சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம்

sketch4ஸ்கெட்ச் : சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம்.இந்த “ஸ்கெட்ச்” சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து “ஸ்கெட்ச்” போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிக்கிறார்கள்.  ஏன், எதற்காக ஹீரோவை தூக்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் சஸ்பென்ஸ். இவர்கள் சூழ்ச்சியை  ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் கதை.

25 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை எழுதி-இயக்கி இருக்கிறார் சாய். இது இவருக்கு முதல் குறும்படம். இந்த குறும்படத்தில் கதாநாயகனாக முருகா, பிடிச்சிருக்கு கோழி கூவுது புகழ் நடிகர் அசோக் குமார் நடித்துள்ளார். இவர் தவிர “சுந்தரபாண்டியன்” புகழ் காசி மாயன் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர இப்படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர்  திரைபடங்களில் நடித்தவர்கள். சுமார் 3.5 லட்ச ரூபாய் செலவில் மிகபிரம்மண்டமாக எடுக்கப்பட்ட குறும்படம் இது. வரும் ஜூன் 14 அன்று வடபழனி RKV studio வில் மாலை 3 மணி அளவில் இந்த குறும் படம் இலவசமாக  திரையிடபடுகிறது.