ஸ்டார் நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன் அகில இந்திய தலைவரானார் !

சூப்பர் ஸ்டார் நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன் அகில இந்திய சிலம்பம் செயல் கூட்டமைப்பின் தலைவரானார் !

தமிழில் ஸ்டார் நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் S. பாண்டியன் ஆசான். இவரிடம் தான் அஜித் , விஜய் , சூர்யா , கார்த்தி , தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலர் சிலம்பம் கற்றுக்கொண்டனர். தமிழ் நடிகர்களின் ஆசானாக இருக்கும் இவரின் கதையை வைத்து சில திரைப்படங்களும் வந்துள்ளன.

நவம்பர் 26 2017 அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலும் மற்றும் ஆண்டு பொது குழுக்கூட்டமும் சென்னை தாம்பரத்தில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

இதில் அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பின் தலைவாராக :- திரு. நைனார் மனோஜ் ,
செயல் தலைவராக :- திரு. பவர் S. பாண்டியன் ஆசான்
துணை தலைவர்களாக :- திரு. G. பாலா , திரு. ராதா கிருஷ்ணன் ( கேரளா )
பொது செயலாளராக :- திருமதி ஐரின் செல்வராஜ்
கூட்டு செயலாளராக :- திரு. பத்ரிநாத் , திரு. S. பாண்டே ( குஜராத் ) , திரு. திலீப் குமார் யாதவ் ( டெல்லி ) மற்றும் திரு. சிவ ராமகிருஷ்ணன் ( ஆந்திரா   )
பொருளாளராக :- திரு . S. முத்து கிருஷ்ணன்
தொழில்நுட்ப குழு தலைவராக :- திரு. செல்வராஜ்  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.