ஹன்சிகாதான் என் பேவரைட்! விஷால் வெளிப்படை

aambala-visal-sundar‘ஆம்பள’ படத்தின் வெற்றிச் சந்திப்பு நடந்தது. அதில் விஷால் பேசும் போது ஹன்சிகாதான் தன் பேவரைட் என்றார்.அவர் பேச ஆரம்பித்ததும் ” இது நான் எப்போதோ நடக்க வேண்டுமென்று  கனவு கண்ட நிகழ்ச்சி. இதே போல் ‘மதகதராஜா’வுக்கு கனவு கண்டேன். 2012ல் பொங்கலுக்கு வரவேண்டிய படம் அது வரவில்லை. எனக்குள் ஒரு வெறித்தனமான உணர்வு இருந்தது, மீண்டும் எங்கள் கூட்டணியில் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டுமென்று.இந்தப் பொங்கலுக்கு ‘ஆம்பள’அப்படி அமைந்திருக்கிறது. அந்தப் படம் வராத வலியும் கோபமும் ஆதங்கமும் மன  அழுத்தமும் எனக்குள் இருந்தது. நிச்சயமாக இந்தப்பட வெற்றி அதையெல்லாம் ஒதுக்கி வைத்து ஓரங்கட்டியிருக்கிறது. இந்தப்படத்தை எல்லாரும் தங்கள் சொந்தப்படம் போல நினைத்து உழைத்தார்கள்.3மாதம் கடுமையான உழைப்பு. பொங்கல் அன்று எல்லாரும் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்தபோது படம் முடித்த நிம்மதியில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன்.
” என்றார். அவரிடம் உங்களுக்கு பொருத்தமான,உங்களுடைய அபிமான கதாநாயகியார் என்று கேட்ட போது.. “நிச்சயம் ஹன்சிகாதான்.. ஹன்சிகாதான் என் பேவரைட்.”என்றவர்,”அடுத்து சுசீந்திரன் படம் அடுத்து லிங்குசாமியின் சண்டக்கோழி–2 ..நடிப்பேன்” என்றார்.

நிகழ்ச்சியில் சுந்தர்.சி நடிகர்கள் சதிஷ், வைபவ்,ஸ்ரீமன்,அபிஷேக், கௌதம்,விச்சு, நடிகை ஐஸ்வர்யா, சண்டை இயக்குநர் கனல் கண்ணன்,  இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆகியோரும் பேசினார்கள்.