ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆய்வுக்கூடம் !

 aayvukkoodam2ஆத்தூர் அறிவழகன் P K S FILMS  சார்பாக இந்த ஆய்வுகூடம் திரைப்படத்தை வாங்கிய பிறகு, இவரின் நண்பரின் மூலம் இத்திரைப்படத்தை பற்றி கேள்விப்பட்ட ஒரு முன்னணி ஹிந்தி  இயக்குநர் படத்தை பார்த்து விட்டு  80 கோடியில் எடுக்க வேண்டிய திரைப்படத்தை 80 லட்சத்தில் அழகாக  எடுத்துள்ளதாக கூறி இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம்.
 
இத்திரைப்படம் விரைவில் ஹிந்தியில் மிகப்பெரிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களால் தயாராக உள்ளது.படத்தின் ஹிந்தி ரீமேக்  உரிமையை விற்ற  தயாரிப்பாளர் P K A FILMS ஆத்தூர் P.அறிவழகன் அந்த பணத்தை வைத்து  தனது நிறுவனத்துக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பை ஆய்வுகூடம்  இயக்குநர் அன்பரசனுக்கே கொடுத்து இருக்கிறார்.இனிவரும் காலங்களில் இதுபோன்ற நல்ல படங்களை வாங்கி வெளியிடுவேன் என்று ஆத்தூர் அறிவழகன் கூறியுள்ளார்.
 
முதல் திரைப்படத்தில் மூளையை மாற்றிய இயக்குநர் அன்பரசன் இரண்டாம் படத்தில் மனதை மாற்றுகிறார்.(காதல்தாங்க) ஆனால் ஆய்வுகூடம் படத்தை போலவே இப்படத்திலும் காமெடியும் விறுவிறுப்பும் கண்டிப்பாக குறையவே குறையாது என்கிறார் இயக்குநர்.