ஹைடெக் கார் திருடும் நட்டி!

natti1ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் போங்கு “         சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் (  நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார்.இவர்   ஹிந்தியில் இரண்டு படங்களிலும் மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த காலண்டர் கேர்ள்ஸ் என்ற படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.