அஜீத்தின் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘பில்லா பாண்டி’

படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.

சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார்.

மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர்தர்மேஷ், மாஸ்டர்  மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விறுவிறுப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின் வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

“பில்லா பாண்டி” திரைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர்.