அட்டுபையன் லட்டுபொண்ணு கதையில் கானாபாலாவிற்கு திருப்புமுனைப் பாடல்!

bosepandi1சந்தையில பஜாருல அங்காடியில

மார்கட்டுல ஷாப்பிங் பண்ண முடியுமாடா காதலஎன்கிற கானாபாலாவின் பாடல்  ‘போஸ் பாண்டி’படத்தில்இடம்பெற்றுஉள்ளது. இந்தபாடல் you – tube இல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தான் பாடியுள்ள மிகச்சிறந்த பாடல்களில் இந்தப்பாடல் குறிப்பிடத்தக்க ஒன்றாகஅமையும் என்றும் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்என்றும் “ஆடிபோனால்ஆவணி” பாடலுக்கு அடுத்து கானாபாலாவிற்கு இதுநல்ல திருப்புமுனையைப் பெற்றுத் தரும்” என்றும் கானாபாலா கூறினார்.

அட்டுபையன் லட்டுபொண்ணு – இதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை. “போஸ்பாண்டி” – திரைப்படத்தின் கதை  இயக்குநர் ராஜாசுப்பையாவால் எழுதப்பட்டது. பிறகு நயன்தாராவைப் போல் ஒருநாயகிக்காகக் காத்து இருந்தபொழுது, நேஹாகாயத்ரியைக் கண்டுபிடித்து இந்தப்படத்தில் நடிக்கவைத்துள்ளனர்.  நாயகன் வேடத்தை இயக்குநர் ராஜாசுப்பையாவே ஏற்று  நடித்துள்ளார். இந்தப் படம் பண்டூன்டாக்கீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ganabala23

ஒரு சுமாரான பையன் சூப்பரான பொண்ணுக்காகக் காத்துஇருக்கிறான். அவன்விரும்பியபடிசூப்பரான பெண்ணை மணந்தானா இல்லையா என்பதுதான் கதை. இதை மிகவும் சுவாரசியமாக சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக நம்ம பக்கத்து வீட்டுப்பையனுக்கு நடக்கும் சம்பவம்போல் படமாக்கியுள்ளனராம்.

இந்தபடத்தின் trailer-ஐ பார்த்த சினிமா பிரபலங்கள்  trailer- மிகவும் புதுமையான முறையில் உள்ளது என்று பாராட்டி உள்ளனர். சிலர் முழுப்படத்தையும் காட்டுமாறு இயக்குநரிடம் கேட்டுஉள்ளனர். இயக்குநரோ ஒரு பெரிய நிறுவனத்தின் மூலம் இந்தப்படம் வெளிவர இருப்பதால், அந்தநிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் காட்டமுடியாது என்று மறுத்துவிட்டார்.

பொங்கல்முதல் இப்படத்தின் trailer – தமிழ்நாட்டில் உள்ளமுக்கியமான திரைஅரங்குகளில் காட்டப்படும் என்று இப்படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் பொங்கல்அன்று இப்படத்தின்  trailer – யு – tube லும் வெளியிடப்படும் என்று இப்படக்குழுவினர் தெரிவித்தனர். பொங்கல் முடிந்து சில வாரங்களில்இத்திரைப்படம்  வெளிவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நகைச்சுவையோடு  ஒரு அழகான சமூகக்கருத்தும் சொல்லப்பட்டு உள்ளதாம்.

இந்தப்படத்தில் “அசத்துதடிஉன்அழகு” என்ற melody பாடலை இயக்குநர் ராஜாசுப்பையாவே எழுதியுள்ளார். படத்தின் இசைஅமைப்பாளரே இந்தப் பாடலைபாடியுள்ளாராம்.  இசை அமைப்பாள ர்தன்ராஜ்மணிக்க ம் இயக்குநரின் நெருங்கிய நண்பராம். உமாசுப்ரமணியம், சீர்காழிசிற்பி ஆகியோர் மற்றபாடல்களை எழுதிஉள்ளனர்.

கதைக்காக நாயகன்ராஜா சுப்பையா தன்னை மிகவும் அசிங்கமாகக் காட்டவேண்டும்என்பதற்காக பட்டினிகிடந்து தூங்காமல் நடித்துள்ளார். நேஹாகாயத்ரி “உ” என்றபடத்தில்ஏற்கெனவே நடித்துள்ளார்.