அதர்வா நடிக்கும் சிரிப்பு படம்’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’

adharva1அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இத்திரைப்படம் அம்மா கிரியேஷனின்  சில்வர் ஜூபிலி திரைப்படமாகும். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ரெஜினா கசாண்ட்ரா , ப்ரணிதா , அதிதி போஹங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்தக் கதைக்கு நான்கு கதாநாயகிகள் தேவைப்பட்டதால் இப்படத்தில் நான்கு பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை பொறுத்தவரை இவர்தான் கதாநாயகன் , இவர்தான் காமெடியன் , இவர் தான் ஹீரோயின் என்று எதுவும் கிடையாது. திரைக்கதையில் ஒவ்வொருவரின் பகுதியும் சுவாரசியமாக இருக்கும். ரொமண்டிக் – காமெடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற அதர்வாவின் ஆசை இதன் மூலம் நிறைவேறி உள்ளது.

gemini-suruli1முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும் சூரியும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களோடு இப்படத்தில் நான்கடவுள் ராஜேந்திரன் , டி.சிவா , மயில்சாமி , சோனியா போஸ் வெங்கட் , பிக் பிரிண்ட் கார்த்திகேயன் ,தீனா , லோகேஷ் & கோபி , ஐஸ்வர்யா பழனி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களோடு சிறப்பு தோற்றத்தில் நேகாமாலிக் நடித்துள்ளார்.