அப்படி அரிவாள் தூக்கியவர்களில் நானும் ஒருவன். : வருத்தப்படும் இயக்குநர் சற்குணம்

தேசிய விருது பெற்ற ஏ.சற்குணம் இயக்கியுள்ள ‘சண்டிவீரன்’ படம் தண்ணீர் பிரச்சினையை கையில் எடுத்துச் சொல்லி இருக்கிறது.இயக்குநர் சற்குணத்துடன் ஒரு சந்திப்பு.

தண்ணீர் பிரச்சினையைப் பற்றிப் பேசும் படத்திற்கு ஏன் ‘சண்டிவீரன்’ என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்?sargunam

‘படத்தைப் பார்க்க உள்ளே வரவேண்டும் என்றால் கமர்ஷியலாக தலைப்பு வேண்டும். படத்துக்குப் பொருத்தமாகவும் இருக்கவேண்டும் எனவேதான் ‘சண்டிவீரன்’ என்று வைத்தோம்.”

உப்பு நீர் பிரச்சினை தமிழ்நாட்டில் இப்படி உள்ளதா?

”தமிழ்நாட்டில்உப்பு நீரைக்  குடித்துக் கொண்டு 400 ஊர்கள் உள்ளன. இது அரசுப்பட்டியலில் உள்ளது., இது இன்னும் 2 ஆண்டுகளில் பத்தாயிரம் ஆகப் போகிறது இது ஒரு பெரிய பிரச்சினை இதன் தாக்கம் இப்போது தெரியாது. ஆழ் துளை கிணறுகளால் நீர்மட்டம் கீழே போய் உப்பு நீராக மாறி வருகிறது. வரும் ஆண்டுகளில்ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியும்.”

தண்ணீருக்காக இப்படியா சண்டை போடுவார்கள்?

”இது உண்மைதான். இந்தக் கதை எங்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் நடந்த கதைதான். எங்கள் ஊரான ஆம்பலாப்பட்டு கிராமத்துக்கும் பக்கத்து ஊரான சோழகன் குடிக்காடு ஊருக்கும் தண்ணீருக்காக இப்படி ஒரு பகை இருந்தது. அதற்கான கலவரத்தை நானே நேரில் பார்த்தேன். இன்னமும் சொல்லப் போனால் எங்கள் ஊருக்காக அப்படி அரிவாள் தூக்கிக் கொண்டு போனவர்களில் நானும் ஒருவன். அது அந்த நேரத்து அறியாமை. ”

படப்பிடிப்பில் மறக்க முடியாதது?
”அதர்வா கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அதுபோல எல்லாரும் தங்கள் சொந்தப்படம் போல உழைத்தனர்.

படப்பிடிப்பு தஞ்சாவூர், ராமநாதபுரம் பகுதிகளில் எடுத்தோம். செழிப்பான பகுதிகள்  தஞ்சாவூரிலும் வறண்ட பகுதிகள் ராமநாதபுரத்திலும் எடுக்கப் பட்டன.

நாங்கள் லொக்கேஷன் தேடிப் போனபோது தேர்ந்து எடுத்த உப்பு நீர் ஊர் உண்மையிலேயே உப்புநீர் குளம் உள்ள ஊராகவே இருந்தது இதைஅறிந்து ஆச்சரியப் பட்டோம்.”

தயாரிப்பாளர் பாலா பற்றி?

”எந்தத்தலையீடும் இல்லாத தயாரிப்பாளராக ஊக்கம் கொடுத்தார்.முழு சுதந்திரம் கொடுத்தார். படம் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.”


‘சண்டிவீரன்’ படத்துக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இது பற்றி நீங்கள் கூறுவது என்ன?

“சிங்கப்பூரில் உள்ள ‘ரோத்தா’ என்கிற காவல்துறையின் நடவடிக்கை விஷயம் உலகம் முழுக்க பரவலாகத் தெரிந்ததுதான்.

இது தங்கள் நாட்டு விஷயம் எனக்கருதி இதுபற்றி படத்தில் வருவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதை அவர்கள் தங்கள் நாட்டு விஷயமாகப் பார்க்கிறார்கள். எனவே படத்தை அனுமதிக்க முடியாது என்கிறார்கள். சில காட்சிகளை நீக்கிவிட்டு விரைவில் அங்கு ‘சண்டிவீரன்’வெளியாகும். அதில் யாருக்கும் சிக்கல் இல்லை. இதேபடம் அருகிலுள்ள மலேசியாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ”

தான் தேசியவிருது பெற்ற போது 2012ல் தமிழ்நாட்டுக் விருதுக் கலைஞர்களுக்கு அப்துல்கலாம் அளித்த விருந்து இப்போது நினைத்தால் விருதைவிட பெரிய மகிழ்ச்சியாக பெருமையாக இருக்கிறது  என்கிறார் இயக்குநர் சற்குணம்.