‘கப்பல்’ பட இயக்குநருக்கு ஷங்கர் எச்சரிக்கை!

Director Karthik,Madhankarky,Music Director Natarajan Shankaranஇயக்குநர் ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் வெளியிடும் ‘கப்பல்’ படத்தின் ஊடக சந்திப்பு இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் பேசினர். இயக்குநர் கார்த்திக் ஜி. க்ரிஷ் பேசும்போது ” இது நட்பு பற்றியகதை.  அளவுக்கு அதிக அன்பு வைக்கும் போது  நட்பு என்னாகிறது என்கிற கதை. இதில் காதல், நட்பு,எமோஷன், காமெடி எல்லாம் இருக்கும். இது ஒரு முழுநீள மாஸ் எண்டர்டெய்னர். ”என்றவர் தன் முன்கதைச் சுருக்கத்தை சொன்னார்.

” ஷங்கர் சாரின் ‘இந்தியன்’ படத்தைப் பார்த்துதான் எனக்கு சினிமா மோகமே வந்தது. அவரது படங்களை விரும்பிப் பார்ப்பேன். அப்போது சினிமாவில் சேர வழியே தெரியாது, முதலில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தேன் அங்கு போன பிறகுதான் தெரிந்தது அது மட்டும் போதாது யாரிடமாவது சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்று . இது ‘அந்நியன்’ சமயம் அப்போது ஷங்கர்சார் அங்கு வந்தார். படம் பார்த்து அதைப்பற்றி கலந்துரையாடல் செய்ய வேண்டும்.செய்தோம்.

அவரிடம் உதவியாளராகச் சேரலாம் என்றால் 5 பேர்தான் எடுப்பார். நாம் எப்போது சேரப் போகிறோம் என்று  கவலைப்பட்டேன்.. இப்படி இருக்கும் போது  ஒரு நாள் உதவியாளராக்க ஆள் எடுக்கிறார் என்ற கேள்விப்பட்டு அப்ளை செய்தேன். மோத்தம் 400 பேரில் நான் தேர்வானேன். என்னை எப்படிதேர்வு செய்தார் என்று இன்றுவரை எனக்கே தெரியவில்லை. ‘சிவாஜி’, ‘எந்திரனி’ல் வேலை பார்த்தேன். பிறகு வெளியே வந்து வாய்ப்பு தேடிய போது ஒரு நாள் என் பள்ளி நண்பன் சுதனைச் சந்தித்தேன். பிஸினஸ் செய்வதாகக் கூறினார்.என்னைப் பற்றி விசாரித்தார். பிறகு பார்க்கலாம் என்றார். பிறகு சிலநாள் கழித்து சந்தித்தோம். அவரும் அவரது நண்பர்களும்சினிமா ஆர்வத்தில் இருப்பது தெரிந்தது.

மினிமம் பட்ஜெட்டில் கதை கேட்டார்கள். மினிமம் பட்ஜெட்டில் கதை இல்லை என்றேன் பெரியபட்ஜெட்டில்தான் கதை  இருக்கிறது என்றேன். அட் வான்ஸ் கொடுத்துவிட்டு கதை பண்ணச் சொன்னார்கள். பிறகு நாலு லைன் சொன்னேன். அதில் ஒன்றுதான் ‘கப்பல்’ . இப்படிஇது ஒரு புள்ளியாகத்தான் ஆரம்பித்தது.

பிறகு ஒவ்வொன்றாக இணைந்து வளர்ந்து படத்தை நல்ல முறையில் முடித்தோம். என் ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் ஷங்கர் சாரிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். படம் ஆரம்பிக்கிற சமயம் அவரைப் பார்த்தேன்.’ பயமாக இருக்கு சார் ‘ என்றேன்.  ‘அந்தப் பயம் நெஞ்சுல இருக்கணும்’ என்று கூறினார் ‘ உன்னால் முடியும் நீ செய்வாய்’ என்றார்.பாடல்கள் கொடுத்தேன் புதுசா இருக்கு என்றார். படம் முடித்து போட்டுக்காட்டிய போது பாராட்டினார்.

முதல் காட்சியிலிருந்து கடைசி வரை ஜாலியாக சிரித்துக் கொண்டே பார்த்தார் சில நாட்களில் அவரே வெளியிடுவதாகக் கூறினார். அவர் அறிவித்ததும் படமே பிரமாண்டமானதாக மாறிவிட்டது. “என்றார். நிகழ்ச்சியில் படக் குழுவினரும் பேசினர்.