அனுஷ்காவுடன் ஆர்யா நடிக்கும் புதிய படம் தொடக்கம் !

arya-padamPVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero) புதிய  படத்தில் ஆர்யா, அனுஷ்கா , மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதா பாத்திரத்தில் நடிக்கிறார், ஸ்ருதி ஹாசன் கௌரவ தோற்றத்தில் வருகிறார்.
ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவில் , ஆனந்த் சாய் கலை இயக்கத்தை மேற்கொள்ள, இந்த நகைச்சுவை காதல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்   MM கீரவாணி. சந்தீப் குன்னாம் நிர்வாக தயாரிப்பை  மேற்கொள்கிறார். திருமதி கனிகா திலோன் கொவேலமுடிகதை, திரைக்கதை எழுதியுள்ள  , இப்படத்தை  இயக்குநர் பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார்.
முதல் நாள் படபிடிப்பை இயக்குநர்  ராகவேந்திர ராவ் இயக்க, திருமதி. PVP ஒளிப்பதிவு செய்ய  , கனிகா திலோன் கொவேலமுடி கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்