அனுஹாசனின் ஆர்ப்பாட்டமான நடிப்பில் வல்லதேசம்!

anuhasan-vdலக்ஷனா பிக்சர்ஸ் பிலிட் வழங்கும் ‘வல்லதேசம் படத்தில் அனுஹாசன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார்.

இப்படத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது அப்போது அனுஹாசன் பேசும் போது ”நான் லண்டன் போயிருந்த போது இந்தப் இயக்குநர் நந்தாவைச் சந்தித்தேன் அவர் என்னிடம் படமெடுக்கவுள்ள தகவலைக் கூறி கதை சொன்னார். ஒப்புக் கொண்டேன் அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அவர் பேசியமுறை நடந்துகொண்டமுறை பழகிய பண்பு என்னைக் கவர்ந்தது. மதிப்பு ஏற்பட்டது இரண்டு இந்தக் கதை நடிக்க மட்டுமல்ல என் வீரத்தைக் காட்டவும் வாய்ப்பாக இருந்தது. நான் களரி எல்லாம் கற்றவள். ஜிம்னாஸ்டிக் தெரியும். .இதை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதை விடடுவிடுவேனா? கப்பென்று பிடித்துக் கொண்டேன். படத்தில் சண்டையெல்லாம் போட்டு இருக்கிறேன்.அது நம்பும்படி இயல்பாக இருக்கும் .நாசர் சாருடன் இந்திரா வுக்குப்பிறகு 25 ஆண்டுகளுக்குப்பின் நடித்துள்ளேன். இத்தனை ஆண்டுகளில் இருவரும் மாறியுள்ளோம்.” என்றார். இக்கதை லண்டன் இந்தியா என்று நடக்கிறது. நாட்டுப் பற்றை மையப் படுத்திய கதை என்றார் இயக்குநர் என. டி நந்தா. எஸ்.இம்மானுவேல்,  கே.ரவீந்திரன்,தயாரித்துள்ளனர்