அனைவரையும் மகிழ்விக்க ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ – அருள்நிதி

4pcவெற்றிபெறும் நல்ல தேர்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது சினிமாவில் மிக அவசியமான விஷயம். ரசிகர்களின் ரசனைக்கேற்பவும், commercialஆக வெற்றி பெறும்  படங்களில் நடித்து வரும் அருள்நிதி தனது அடுத்த படமான ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ மூலம் அனைவரையும் மகிழ்விக்க இருக்கிறார். NJ ஸ்ரீகிருஷ்ணா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். JSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் நாளை (ஜூலை 24) ஆம் தேதி வெளிவருகிறது.

“ இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்“ கதையை என்னிடம் கூறும்பொழுது இப்படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.  குற்றமற்ற மக்கள் வாழும் ‘பொற்பந்தல்’ என்னும் அழகிய கிராமத்தில் இருக்கும் நான்கு காவலாளிகள் பற்றிய கதை இது. அந்த மொத்த கிராமத்தில் இருக்கும் அனைவரும் கதைக்கு மிகவும் அவசியமானவர்களாக இருப்பது இதன் கூடுதல் சிறப்பு.

“நல்ல கதைகளில் நான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் ஒரு புது முயற்சி. குடும்பத்துடன் ரசிக்ககூடிய ஒரு திரைப்படமாக இயக்குநர் கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் ‘பொற்பந்தல்’ கிராமத்திற்கு நம்மை கொண்டு செல்லும் திரைப்படம் இறுதியில் சிரிப்பு போர்ப் பந்தலில் தான் வெளிப்படும். “ எனக்கூறித்  தன் புன்னகையுடன் விடை பெற்றார் அருள்நிதி.

” ‘நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்’ திரைப்படத்தின் வெளியீட்டில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டன. எங்கள் திரைப்படம் அறிவித்தவாறே நாளை வெளியாகும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.”  எனக் கூறினார் தயாரிப்பாளர் JSK சதிஷ் குமார்