ஆண்ட்ரியா- ஜெய் நடிக்கும் ‘வலியவன்’

and-jaiஎஸ்.கே ஸ்டியோஸ் சார்பில் கே.என்.சம்பத் தயாரிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகும் படம் “வலியவன்”.

ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.

‘வலியவன்’ படத்தின் கதாநாயகனாக மற்றும் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குநர சரவணன்.and-lll

மென்மையான காதலை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. மேலும் படத்தின் முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் படமாக்க படவுள்ளது.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சரவணன்,தயாரிப்பு – KM. சம்பத்,ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணா,இசை – டி.இமான்,

கலை – ராஜா மோகன்,படத்தொகுப்பு – சுபாரக்,பாடல்கள் – நா.முத்துக்குமார்,நடனம் – பிருந்தா,சண்டைப் பயிற்சி – ஸ்டண்ட் செல்வா,தயாரிப்பு மேற்பார்வை – எம். காசிலிங்கம்.