‘ஆம்பள’ விமர்சனம்

IMG_8098தன் அம்மாவிடம் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் அப்பாவின் கதையைக் கேட்கிறார் விஷால். அப்பாவைத்தேடிச் சந்திக்கிறார்.பிரிந்த காரணம் அறிகிறார். சொத்துக்கள் எல்லாம் மீட்க வேண்டும், பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்றால், என் தங்கைகளுக்கு மூன்று பெண்கள் உள்ளனர். அவர்களை காதலித்து திருமணம் செய்தால் அனைத்தும் கைகூடும் என்று  அப்பா பிரபு, மகன்கள் விஷால், வைபவ், சதீஷ்  ஆகியோரிடம் கூறுகிறார்.அதன் படி விஷால் தன் அத்தையைக் சந்தித்து குடும்பத்தை ஒன்று சேர்க்க முயல்கிறார்.

அதற்குத் தோதாக அத்தை மகள் ஹன்சிகாவை காதலித்து வீட்டுக்குள் விஷால் நுழைகிறார். கூடவே தம்பிகளும் வருகிறார்கள்.தன்னால் வெறுக்கப்பட்ட தன் அண்ணனின் மகன்தான் விஷால் என்று அத்தை ரம்யா கிருஷ்ணனுக்கு தெரியவர. விரட்டுகிறார். ஆனால் விரட்டியவரே தன் அரசியல் எதிரியை பழிவாங்க விஷாலை அழைக்கும்படி சூழல் வருகிறது. அப்பா சொன்னதைக் கேட்டு விஷால், வைபவ், சதீஷ் இவர்கள் மூவரும் தன் அத்தை மகள்களை காதலித்து திருமணம் செய்தார்களா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்பவை கேள்விகள்.இதற்கான பதில்களுடனான  கதைக்கலவைதான் ‘ஆம்பள ‘படம்.

கூட்டத்துக்கு ஆள்பிடித்துக் கொடுக்கிற நபராக அறிமுகமாகிற விஷால், ஹன்சிகா மீது கண் வைக்கிறார். இப்படி தொடங்குகிறது படம்.

விஷால் அரசியல்வாதி ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்து தன் அப்பாவை ஒன்று சேர்க்க முயற்சி செய்ய ஆரம்பித்ததும் கல கலப்பு ஆரம்பித்து விடுகிறது. இது படம் முழுக்க கொடி கட்டிப் பறக்கிறது.

நாயகன் விஷால், அப்பாவாக பிரபு,உதவும் நண்பனாக போலீஸ் சந்தானம். உடன் வருவோராக தம்பிகள் வைபவ், சதிஷ். விஷால் அண்ட் கோ ஆளாளுக்கு ஒரு ஜோடி என ஹன்சிகா, மதுரிமா, மாதவிலதா, என அலைகிறார்கள்.,அலைபாய்கிறார்கள்.

அரசியல்வாதியாக ரம்யாகிருஷ்ணன்,அவரின் தங்கைகளாக  கிரண் ,ஐஸ்வர்யா ,அவர்களின் குடும்பத்தினராக அபிஷேக், ஸ்ரீமன், கௌதம்.. போட்டிஅரசியல்வாதி பசுபதியாக பிரதீப் ராவத்,  என எத்தனையோ பேர் நடித்துள்ளார்கள்.

அத்தனை பேரையும் வைத்து எப்படி இப்படி தீனிபோட்டு கல கலப்பு செய்திருக்கிறார். இது சுந்தர் சிக்கு மட்டுமே வசப் படும் தொழில் திறமை.

பலருக்கும்  நடிக்க இடம் கொடுத்து தயாரிப்பாளராக மட்டுமல்ல நடிகராகவும் பெருந்தன்மை காட்டியுள்ளார் விஷால். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் ஹிப் ஹாப் தமிழாவின் இசையும் படத்துக்கு இளமை கூட்டுகின்றன.

‘மதுரை விரன் எங்க சாமி’ போல ரொம்ப்ப பழைய கதையாக இருந்தாலும் சரமாரியான நட்சத்திரங்கள், சரவெடி சிரிப்புகள். கலகலப்பு.. கிளு கிளுப்பு ,வண்ணமய காட்சிகள் என பின்னியுள்ளார் சுந்தர் சி.அசைவம் வாசனை இருந்தாலும் அளவு தாண்டாத சிரிப்புகள். சிரிப்புதான் நோக்கம் லாஜிக் அல்ல என்பதில் தெளிவாக இருந்து வெற்றிகரமாக ஒரு வணிகப் படத்தை கொடுத்திருக்கிறார்.