ஆளுநர் கலந்து கொண்ட ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 18 ஆம் ஆண்டு விழா !

svmhss2ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துளசி தோட்டம், செல்லியம்மன் நகர், அத்திப்பட்டு சென்னை – 58. 18 ஆம் ஆண்டு விழா 30.10.15 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ் நாடு ஆளுநர் மேதகு. ரோசய்யா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினார். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் ‘டாக்டர் பட்டம் பெற்றவர்; தொடர்ந்து 16 முறை ‘மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவர்.

ஆந்திரப் பிரதேசத்தில் முதலமைச்சருக்கு செயளாளராக இருந்து, 33 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட திரு. பிரபாகர ரெட்டி அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். இவர் வாரங்கல், கிருஷ்ணா மாவட்டங்களுக்கு ஆட்சியராக பணி புரிந்தவர். திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் திரு. வீர ராகவ் ராவ் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆளுநர் அவர்கள் ‘சைத்தன்ன விகார்’ – ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி சார்ந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயாவின் கட்டடத்தைத் தம் பொற்கரங்களால் திறந்தும், ‘பாடசாலா’ என்னும் செய்திச்சுடரை வெளியிட்டும் சிறப்பித்தார் .இவ்விழா சிறப்படைய பெரிதும் துணை நின்ற      திரு சசிபாஸ்கர் சல்சாணி அவர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் ஆளுநர் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாநில, மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், தேசிய அளவில் வெற்றி பெற்ற கால் பந்தாட்ட வீரருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். முழு மதிப்பெண் பெறவைத்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் – இதிகாசங்கள், புராணங்கள், நன்னெறிக் கதைகள், நாட்டிய நாடகங்கள், இன்னிசைப் பாடல்கள் மூலமாக அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. பள்ளித் தாளாளர் திரு. கண்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்க, பள்ளி முதல்வர் திருமதி உமாகண்ணன் அவர்கள் ஆண்டறிக்கை வாசிக்க, பள்ளியின் முதன்மை அதிகாரி திருமதி. தான்யா பாரதி  நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.