‘ஆ…’ விமர்சனம்

aaah-hneபேய் உண்டா இல்லையா இது காலம் காலமாக கேட்கப் படும் மில்லியன் டாலர் கேள்விதான். இதே கேள்வியை ஒருவன் கேட்கிறான். உண்டு, இல்லை என்று பதில்கள். உண்டு என்று நிரூபித்தால் தன் சொத்தில் பாதியைத் தருகிறேன் என்கிறான் அந்த மில்லியனர் வாலிபன். ஐயோ.. ஐயோ என்று திருவிளையாடல் தருமி போல தவிப்புடன் கிளம்புகிறது ஒரு குழு.

பேய் இருப்பதற்கான தடயம் கிடைத்த இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். கை கூடி வரும் வேளையின் ஆதாரத்தை பதிவு செய்வதற்கு காரியம் கெட்டு விடுகிறது.

இப்படி வீடியோ கேமராவுடன் இந்தக்குழு 5 பகுதிகளுக்குப் பயணிப்பதுதான் கதை. பேய் இருக்கிறது என்று நிரூபித்தார்களா இல்லையா  என்பதுதான் முடிவு.

அவர்கள் பயணிக்கும் நடுக்கடல், ஏடிஎம் ஜப்பான், துபாய், நெடுஞ்சாலை என எல்லாமே புதுப்புது தளங்கள். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக மிரட்டுகிறார்கள்.

ஜப்பானில் மருத்துவமனை ஒரு பாணி என்றால்   துபாயில் இன்னொரு  பாணி.நடுக்கடல், ஏடிஎம் , நெடுஞ்சாலை ஒவ்வொன்றும் ஒரு பாணி பாலைவனப் புயலாக  பேய் வரும் காட்சி  ஆ என அலற வைக்கிறது என்றால்  ஏடிஎம் காட்சியோ எகிற வைக்கிறது இதயத்தை.ஒவ்வொன்றும் சோடை போகவில்லை.

ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் மிரட்டுகின்றன. எல்லா நாட்டிலும் பேய் நம்பிக்கை உண்டு என உணர வைக்கிறார்கள். பார்க்கவே முடியாத பேய்தான் முக்கிய பாத்திரம் என்பதால் கோகுல்நாத், பாபி சிம்ஹா, மேக்னா, எம். எஸ். பாஸ்கர் ,பாலா சரவணன்போன்று நன்றாக நடித்துள்ள நடிகர்களையும் மறந்து விடுகிறோம். ‘அம்புலி 3டி’ க்குப்பின்  இயக்குநர்கள் ஹரி& ஹரீஷ் புதிய அனுபவத்தை உணர வைத்துள்ளனர்